- Advertisement -
ஐ.பி.எல்

60 ரன்ஸ்.. தொடர்ந்து 4 வெற்றிகள்.. பஞ்சாப்பை வீட்டுக்கு அனுப்பிய ஆர்சிபி.. இன்னும் பிளே ஆஃப் வாய்ப்பிருக்கா?

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே ஒன்பதாம் தேதி இரவு 7.30 மணிக்கு தரம்சாலா நகரில் 58வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவுக்கு கேப்டன் டு பிளேஸிஸை 9 ரன்களில் அவுட்டாக்கிய கவேரப்பா அடுத்ததாக வந்த வில் ஜேக்ஸை 12 ரன்னில் காலி செய்தார்.

இருப்பினும் மறுபுறம் நட்சத்திர துவக்க வீரர் விராட் கோலி அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரஜத் படிடார் அதிரடியாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 3 பவுண்டரி 6 சிக்சருடன் 55 (23) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் அதிரடி காட்டிய விராட் கோலியும் அரை சதமடித்து 7 பவுண்டரி 6 சிக்ஸருடன் 92 (47) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

பெங்களூரு வெற்றி:
குறிப்பாக 195 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவர் தன்னை சுயநலவாதி என்று சொன்னவர்களுக்கு பதிலடி கொடுத்தார். இறுதியில் கேமரூன் க்ரீன் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக 46 (27), ரன்களும் தினேஷ் கார்த்திக் 18 (7) ரன்களும் எடுத்ததால் 20 ஓவரில் பெங்களூரு 241/7 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக கவேரப்பா 2, ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து 242 ரன்களை துரத்திய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் 6 (4) ரன்களில் அவுட்டாகி மாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ இரண்டாவது விக்கெட்டுக்கு 65 ரன்கள் பாரினர்ஷிப் அமைத்து 27 (16) ரன்களில் அவுட்டானார். எதிர்புறம் அவருடன் சேர்ந்து விளையாடிய ரிலீ ரோசவ் அபாரமாக விளையாடி 9 பவுண்டரி 3 சிக்சருடன் அரை சதமடித்து 61 (27) ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

அப்போது சசாங் சிங் அதிரடியாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் ஜித்தேஷ் சர்மா 5, லியான் லிவிங்ஸ்டன் 0 ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர். அடுத்த சில ஓவரிலேயே சசான் சிங்கும் 37 (19) ரன்களில் விராட் கோலியின் அபாரமான ரன் அவுட்டால் பெவிலியின் திரும்பினார். இறுதியில் கேப்டன் சாம் கரண் 22, அசுடோஸ் சர்மா 8 ரன்கள் எடுத்தும் 17 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பஞ்சாப் 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 3, ஸ்வப்னில் சிங் 2, லாக்கி பெர்குசன் 2, கரண் சர்மா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதன் காரணமாக மும்பையை தொடர்ந்து 2வது அணியாக பஞ்சாப் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. மறுபுறம் 12 போட்டிகளில் 5வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

இதையும் படிங்க: லக்னோ அணியின் உரிமையாளருடன் ஏற்பட்ட வாக்குவாதம்.. முக்கிய முடிவை எடுக்கவுள்ள – கே.எல் ராகுல்

குறிப்பாக ஆரம்பத்தில் தொடர் தோல்விகளால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவித்த பெங்களூரு முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் பின் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்ற பெங்களூரு தற்போது மும்பையை பின்னுக்குத் தள்ளி பஞ்சாப்பை வெளியேற்றி போராடி வருகிறது.

- Advertisement -