- Advertisement -
ஐ.பி.எல்

அவங்கள திரும்ப திரும்ப ஏமாத்த முடியாது.. இனிமேல் ஸ்ட்ரைக் ரேட்டை பாருங்க.. விராட் கோலி பேட்டி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே ஒன்பதாம் தேதி நடைபெற்ற 58வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 60 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. தரம்சாலா நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 241/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 92, ரஜத் படிடார் 55, கேமரூன் க்ரீன் 46 ரன்கள் எடுத்தனர்.

பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக கவேரப்பா 2, ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். ஆனால் அதைத் துரத்திய லக்னோ ஆரம்ப முதலே அதிரடியாக விளையாட முயற்சித்து 17 ஓவரில் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரிலீ ரோசவ் 61, சசாங் சிங் 37 ரன்கள் எடுத்த நிலையில் பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக முகமத் சிராஜ் 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

ஆட்டநாயகன் விராட்:
அதன் காரணமாக மும்பையை தொடர்ந்து 2வது அணியாக பஞ்சாப் வெளியேறியது. மறுபுறம் 12 போட்டிகளில் 5வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 92 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் திரும்பத் திரும்ப சுமாரான கிரிக்கெட்டை விளையாடி ஆர்சிபி ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை என்று விராட் கோலி கூறியுள்ளார்.

அத்துடன் இனிமேல் தொடர்ந்து அணிக்காகவும் தமக்காகவும் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட உள்ளதாக தெரிவித்த அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “என்னை பொறுத்த வரை இப்போதும் எண்ணிக்கையை விட தரமே முக்கியம். அது நன்றாக வேலை செய்கிறது. கிரிக்கெட்டை நன்றாக புரிந்து கொள்வது நீங்கள் குறைவான பயிற்சியை எடுக்க அனுமதிக்கிறது. எனவே கடந்த காலங்களில் செய்ததை நான் மீண்டும் செய்ய முயற்சிக்கிறேன்”

- Advertisement -

“இப்போதும் ஒரு பேட்ஸ்மேனாக நான் முன்னேறுவதை லட்சியமாகக் கொண்டிருக்கிறேன். ஸ்பின்னர்களுக்கு எதிராக ஸ்வீப் அடிக்கிறேன். அதை நான் பயிற்சி செய்யவில்லை. ஆனால் கடந்த காலங்களில் அடித்துள்ளேன் என்பது எனக்கு தெரியும். நான் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பது தெரியும். அதற்கு கொஞ்சம் நம்பிக்கை தேவை. எனக்கும் அணிக்கும் ஸ்ட்ரைக் ரேட்டை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன். நமக்கு நாமே நேர்மையாக இருப்பது தான் போட்டியில் முன்னோக்கி செல்வதற்கான ஒரே வழி. ஆரம்பத்தில் எங்களுக்கு அந்தத் தோல்விகள் இருந்தன”

இதையும் படிங்க: 60 ரன்ஸ்.. தொடர்ந்து 4 வெற்றிகள்.. பஞ்சாப்பை வீட்டுக்கு அனுப்பிய ஆர்சிபி.. இன்னும் பிளே ஆஃப் வாய்ப்பிருக்கா?

“அப்போது நேர்மையாக உரையாடிய நாங்கள் ஆட்டத்தை மேலே இழுக்க வேண்டியிருந்தது. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி மிகவும் ஆழமாக சென்றது. நாங்கள் எங்கள் சுயமரியாதைக்காக விளையாட விரும்புகிறோம். நாங்கள் களத்திற்கு சென்று அப்படி விளையாடி தொடர்ந்து எங்கள் ரசிகர்களை ஏமாற்ற முடியாது. எனவே இந்த வெற்றிகளால் எங்களுடைய தன்னம்பிக்கை திரும்பியுள்ளது. அதனால் நாங்கள் நல்ல ஓட்டத்தில் இருக்கிறோம்” என்று கூறினார்.

- Advertisement -