ஆசிய கோப்பை 2023 : பாவம் கூல் ட்ரிங்ஸ் தூக்குறதுக்காகவே சஞ்சு சாம்சன செலக்ட் பண்ணிருக்காங்க – முன்னாள் பாக் வீரர் விமர்சனம்

- Advertisement -

வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் ஐசிசி நடத்தும் 2023 உலகக்கோப்பை கோலாகலமாக நடைபெற உள்ளது. உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடரில் சொந்த மண் சாதகத்தை பயன்படுத்தி ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி கிரிக்கெட் தொடரில் சந்திக்கும் தொடர் தோல்விகளை நிறுத்தும் முனைப்புடன் விளையாட உள்ளது. அதற்கு தயாராகும் வகையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் நடைபெறும் 2023 ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவதற்காக 17 பேர் கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அந்த அணியில் காயத்திலிருந்து கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் குணமடைந்து தேர்வாகியுள்ளது இந்திய அணியை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகாத திலக் வர்மா நேரடியாக இந்த ஆசிய கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது சிலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கூல் ட்ரிங்ஸ் தூக்க:
அதே போல ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்ப முதலே தடுமாறி வரும் சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக இந்த ஆசிய கோப்பை அணியில் மீண்டும் தேர்வாகியுள்ளார். ஆனால் காலம் காலமாக வாய்ப்புக்காக காத்துக் கிடக்கும் சஞ்சு சாம்சன் இந்த அணியில் வெறும் கண்துடைப்புக்காக பேக்-அப் வீரராக மட்டுமே தேர்வாகியுள்ளது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Sanju-Samson

குறிப்பாக வெறும் 30க்கும் குறைவான பேட்டிங் சராசரியை கொண்டிருக்கும் சூரியகுமாரை விட ஒருநாள் கிரிக்கெட்டில் 50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியை கொண்டிருந்தும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆசிய கோப்பையில் சஞ்சு சாம்சன் கூல்டிரிங்ஸ் தூக்குவதற்காகவே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா விமர்சித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக ரசிகர்கள் ஆதரவு பெற்ற சாம்சனை நீக்கினால் கொந்தளிப்பு ஏற்படும் என்ற காரணத்திற்காகவே பேக்-அப் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “கேஎல் ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படாததால் தமக்கான நிலையான இடத்தை இழந்துள்ளார். அதன் பின் ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டு காயமடைந்த அவர் தற்போது நேரடியாக வாய்ப்பு பெற்றுள்ளது நியாயமற்றதாகும். ஆனால் ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ள இந்திய அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்”

Danish Kaneria

இதையும் படிங்க:தனது குருவான மஹேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்த ரஹ்மனுல்லா குர்பாஸ் – விவரம் இதோ

“குறிப்பாக ராகுல் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது அவர் பெரிய பெயரை பெற்று விட்டார் என்ற ஒரே காரணத்திற்காக நீக்கப்படவில்லை. அதனால் சஞ்சு சாம்சன் மீண்டும் கூல்டிரிங்ஸ் தூக்குவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் அவருக்கு அதிக வாய்ப்பு கொடுக்கவில்லை என்று பலரும் கூறுவதை நான் மறுக்கிறேன். ஏனெனில் கிடைக்கும் வாய்ப்புகளில் அபாரமாக செயல்பட்டு நிலையான இடத்தை பிடிக்க வேண்டிய பொறுப்பு அவருடைய கையில் தான் இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement