தனது குருவான மஹேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்த ரஹ்மனுல்லா குர்பாஸ் – விவரம் இதோ

Gurbaz-and-Dhoni
- Advertisement -

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இலங்கை நாட்டில் நடைபெற்று வருகிறது. ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக தற்போது இலங்கை நாட்டிற்கு பயணித்துள்ள பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன.

Gurbaz-1

- Advertisement -

இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேளையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களை குவித்தது.

Gurbaz

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக துவக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் 151 ரன்களும், இப்ராஹீம் ஜார்டான் 80 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 301 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 49.5 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரரான குர்பாஸ் தோனியின் 18 ஆண்டு கால சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். அந்த வகையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அதிக ரன்கள் அடித்து வீரராக இதுவரை தோனி இருந்தார்.

இதையும் படிங்க : PAK vs AFG : நேர்மையா ஜெயிக்குற வழிய பாருங்க, பாகிஸ்தானின் புதிய சாதனையால் – ஆப்கானிஸ்தானை கலாய்க்கும் பாக் ரசிகர்கள்

கடந்த 2005-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக 148 ரன்கள் குவித்து இருந்தார். ஆனால் தற்போது தோனியின் அந்த சாதனையை தகர்த்து தற்போது குர்பாஸ் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement