PAK vs AFG : நேர்மையா ஜெயிக்குற வழிய பாருங்க, பாகிஸ்தானின் புதிய சாதனையால் – ஆப்கானிஸ்தானை கலாய்க்கும் பாக் ரசிகர்கள்

PAk v AFg Mankad 6
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கை நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற பாகிஸ்தான் 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. 2023 ஆசிய மற்றும் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் முதல் போட்டியில் தங்களை 201 ரன்களுக்கு கட்டுப்படுத்திய ஆப்கானிஸ்தானை வெறும் 59 ரன்களுக்கு சுருட்டி மெகா வெற்றி பெற்ற பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

AFg Gurbhas and Zadran

- Advertisement -

மறுபுறம் படுதோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 300/5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக 227 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ரகமதுல்லா குர்பாஸ் 151 ரன்களும் இப்ராஹிம் ஜாட்ரான் 80 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஷாஹின் அப்ரிடி 2 விக்கெட்களை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 301 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு பகார் ஜமான் 30, இமாம்-உல்-ஹக் 91, கேப்டன் பாபர் அசாம் 53 என டாப் ஆடர் பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை குவித்தனர்.

பாகிஸ்தான் வெற்றி:
இருப்பினும் மிடில் ஆர்டரில் முகமது ரிஸ்வான் 2, சல்மான் ஆஹா 14, உஸ்மான் மிர் 0, இப்திகார் அஹ்மத் 17 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் கடைசி நேரத்தில் அதிரடியாக போராடிய சடாப் கான் 48 (35) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்த போது 11 ரன்கள் தேவைப்பட்ட கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுலர் பந்தை வீசுவதற்கு முன்பாகவே எதிர்ப்புறமிருந்து வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறினார்.

 

- Advertisement -

Naseem Shah

அதை சரியாக கவனித்த பவுலர் பரூக்கி மன்கட் முறையில் ரன் அவுட் செய்தது போட்டியில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினாலும் அடுத்ததாக வந்த நாசீம் ஷா 2 பவுண்டரியுடன் 10* (5) ரன்கள் அடித்து பாகிஸ்தானை வெறும் 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற வைத்தார். அதனால் ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஃபரூக்கி 3 விக்கெட்டுகள் எடுத்தும் போராடி வெற்றி காண முடியாமல் போனது.

மறுபுறம் பந்து வீச்சில் சுமாராக செயல்பட்டு பேட்டிங்கிலும் மிடில் ஆர்டரில் சொதப்பிய பாகிஸ்தானை 2022 ஆசியக் கோப்பையில் இதே ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற வைத்த மேஜிக்கை மீண்டும் நிகழ்த்திய நசீம் ஷா திரில் வெற்றி பெற வைத்தார். அதனால் சடாப் கானை மன்கட் முறையில் குறுக்கு வழியில் அவுட்டாக்கி தங்களுடைய வெற்றியை பறிக்க முயற்சித்த ஆப்கானிஸ்தானின் தோல்வியை பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

PAk vs AFG Haris Rauf Shaheen Afridi

இதையும் படிங்க:IND vs IRE : சுரேஷ் ரெய்னாவின் 13 வருட சாதனை சமன், பழைய பன்னீர்செல்வமாக கம்பேக் கொடுத்துள்ள பும்ரா – ரசிகர்கள் மகிழ்ச்சி

குறிப்பாக இனிமேலாவது நேர்மையாக விளையாடி வெற்றிக்கான முயற்சியுங்கள் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் ஆப்கானிஸ்தானை கலாய்த்து வருகிறார்கள். அத்துடன் இந்த அடுத்தடுத்த வெற்றிகளால் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணி என்ற அந்தஸ்தை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொண்டுள்ள பாகிஸ்தான் 2023 ஆசிய மற்றும் உலக கோப்பைக்கு முன்பாக புதிய சாதனை படைத்துள்ளது. ஐசிசி ஒருநாள் தரவரிசையில் தற்சமயத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தலா 118 ரேட்டிங் புள்ளிகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement