அஷ்வின் ரிட்டயர்டு அவுட் முடிவை கையில் எடுக்க யார் காரணம்? – சஞ்சு சாம்சன் கொடுத்த விளக்கம்

samson
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 20 ஆவது லீக் போட்டி நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணி 10 ஓவர்களிலேயே 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் ஹெட்மையர் மற்றும் தமிழக வீரர் அஸ்வின் ஆகியோர் இணைந்து ஓரளவு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக ரன் குவித்தனர்.

Ashwin

- Advertisement -

அப்போது கடைசியில் 2 ஓவர்கள் இருந்த நிலையில் அஸ்வின் 28 ரன்கள் எடுத்திருந்தபோது ரிட்டயர்டு அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் இளம் வீரர் ரியான் பராக் களத்திற்கு வந்து சிறிதளவு கைகொடுக்க ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 165 ரன்கள் குவித்து அசத்தினர். மேலும் போட்டியின் முடிவில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.

இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிட்டையர்டு அவுட் ஆன அஸ்வின் ஏன் அந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து போட்டி முடிந்து பேட்டியளித்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சில முக்கிய விடயங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில் :

parag

அஸ்வின் அந்த நேரத்தில் ரிட்டயர்டு அவுட் ஆக வேண்டும் என்ற முடிவை எடுக்க முற்றிலும் காரணம் என்னவென்றால் நாங்கள் ஒரு அணியாக எடுத்த முடிவுதான். ஏனெனில் இந்த சீசன் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே இதுபோன்ற சூழ்நிலையை எல்லாம் வந்தால் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது குறித்து நிறைய பேசியுள்ளோம்.

- Advertisement -

அதேபோன்று இதுபோன்ற இக்கட்டான வேளையில் அணி சிக்கும்போது நாம் புதிதாக என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நிறைய பேசியிருக்கிறோம். எனவே இப்படி இந்த போட்டியில் அந்த முடிவை அஷ்வின் எடுத்ததாகவும், இது முழுக்க முழுக்க அணி எடுத்த முடிவு என சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐ.பி.எல் வரலாற்றில் முதல்முறை வித்தியாசமான முடிவை எடுத்து வெளியேறிய அஷ்வின் – இதை கவனிச்சீங்களா?

ஐ.பி.எல் வரலாற்றில் முதல் நபராக அஷ்வின் இப்படி ரிட்டயர்டு அவுட் ஆன முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி சுயநலமின்றி அணியின் நலனுக்காக அஷ்வின் எடுத்த முடிவிற்காக அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

Advertisement