IND vs SL : டி20 தொடரில் இருந்து வெளியேறிய பின்னர் சஞ்சு சாம்சன் போட்ட முதல் பதிவு – உங்களுக்கா இப்படி?

Sanju-Samson
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியானது கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றியை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து ஜனவரி 5-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இதன்காரணமாக தற்போது இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரானது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் சீனியர் வீரர்கள் பலருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படாமல் இளம் வீரர்களைக் கொண்ட அணியே இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தனது வாய்ப்புக்காக நீண்ட காலமாகவே காத்திருந்த சஞ்சு சம்சனுக்கு இந்த இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்த வாய்ப்பினை மிகச் சிறப்பாக பயன்படுத்தி தொடர்ச்சியாக இனிமேல் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக மாறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் மும்பையில் நடைபெற்ற முதலாவது போட்டியின் போது பேட்டிங்கில் ஐந்து ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டம் இழந்து ஏமாற்றத்தை அளித்த சஞ்சு சாம்சன் இரண்டாவதாக பீல்டிங் செய்யும்போது பந்தினை கேட்ச் பிடிக்க சென்று டைவ் அடித்ததில் ஏற்பட்ட கால் காயம் காரணமாக அந்த முதல் போட்டியுடன் இந்த டி20 தொடரில் இருந்து விலகினார்.

மேலும் அவரது உடல்நிலை குறித்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்ட இந்திய அணியின் கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ-யும் சஞ்சு சாம்சன் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகுகிறார் என்றும் அவர் ஸ்கேன் பரிசோதனைக்காக மும்பையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தது. அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா அணியில் இடம் பிடித்தார்.

- Advertisement -

இந்நிலையில் சஞ்சு சாம்சன் இந்த டி20 தொடரில் இருந்து வெளியேறிய பின்னர் தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதில் சில குறிப்புகளையும் எழுதியுள்ளார். அதன்படி மும்பை வான்கடே மைதானத்தில் பீல்டிங் செய்யும்படி இருக்கும் அந்த புகைப்படத்தை பதிவிட்ட சஞ்சு சாம்சன் “எல்லாம் நன்மைக்கே”, “விரைவில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்” என்று தனது கருத்தினை வருத்தமாக பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : பவுலர்களை ரொம்ப இன்சல்ட் பண்ணிடிங்க, எங்களுக்கு சொல்லித்தர வேண்டாம் – டேவிட் ஹசியை விளாசிய அஷ்வின், நடந்தது என்ன

ஏற்கனவே அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை, அவரை அணியில் தொடர்ந்து விளையாட வையுங்கள் என்று ரசிகர்கள் ஆதரவு அளித்து வந்த வேளையில் காயம் காரணமாக இந்த தொடரையும் அவர் தவற விட்டுள்ளது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement