பவுலர்களை ரொம்ப இன்சல்ட் பண்ணிடிங்க, எங்களுக்கு சொல்லித்தர வேண்டாம் – டேவிட் ஹசியை விளாசிய அஷ்வின், நடந்தது என்ன

Ashwin David Hussey
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பேஷ் தொடரில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் எதிர்ப்புறமிருந்த பேட்ஸ்மேன் மெக்கன்சி ஹார்வி பந்தை வீசுவதற்கு முன்பாகவே வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறியதால் ஆடம் ஜாம்பா ரன் அவுட் அதாவது மன்கட் முறையில் அவுட் செய்தார். ஆனால் அதை சோதித்த 3வது நடுவர் பந்தை வீசுவதற்காக சென்ற ஆடம் ஜாம்பா பேட்ஸ்மேன் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறி விட்டார் என்பதை கவனித்த பின் வேண்டுமென்றே ரன் அவுட் செய்தார் என்று சொல்லி அவுட் கொடுக்க மறுத்து விட்டார். அதற்கு சான்றாக பந்தை வீசுவதற்காக கற்பனை 90 டிகிரி செங்குத்து கோட்டை கடந்த அவர் கடைசி நேரத்தில் பின்வாங்கி அவுட் செய்ததை 3வது நடுவர் சுட்டிக்காட்டினார்.

Adam Zamba Mankad

அதனால் இவருக்கு சரியாக மன்கட் கூட செய்ய தெரியவில்லை என்றும் சரியாக மன்கட் செய்வதில் அனைவரும் இந்தியாவின் அஷ்வின் ஆகி விட முடியாது என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்த்தனர். அப்படி வழக்கம் போல சர்ச்சை ஏற்படுத்திய அந்த நிகழ்வுக்கு நிறைய ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். குறிப்பாக இது கிரிக்கெட் விளையாடுவதற்கான வழிமுறையல்ல என்று ஆடம் ஜாம்பா விளையாடியா அணியின் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் வீரர் டேவிட் ஹசி தனது அணி வீரருக்கு ஆதரவு கொடுக்காமல் கடுமையாக விமர்சித்தார்.

- Advertisement -

இன்சல்ட் பண்ணாதீங்க:
இந்நிலையில் பவுலர் பந்தை வீசுவதற்கு முன் பேட்ஸ்மேன் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற விதிமுறை இருக்கும் போது அந்த சமயத்தில் அவுட் ஏன் கொடுக்கவில்லை என்றும் அஷ்வின் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றிய தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த தலைப்பைப் பற்றி பேசவோ எழுதவோ நான் சோர்வாக இருக்கிறேன். ஏனெனில் இந்த சம்பவம் நடக்கும் ஒவ்வொரு முறையும் சாமியார்கள் உள்ளே நுழைந்து பிரசங்கிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்த பின் ஆடம் ஜாம்பா கொடுத்த முறைத்த பார்வை இந்த முழு சம்பவத்திலிருந்தும் நான் நேசித்த சிறந்த விஷயமாகும்”

“அது மல்யுத்த விளையாட்டில் அண்டர்டேக்கரின் பார்வையைப் போலவே இருந்தது. அவர் பேட்ஸ்மேனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பேட்ஸ்மேனும் அவுட்டா என்று தெரியாமல் அமைதியாக நின்றார். மேலும் இந்த வகையான அவுட்டின் நேர்மை தன்மையை அனைவரும் எப்போதும் பேசுவார்கள். ஆனால் அந்த சமயத்தில் அவர் பந்து வீசத் தொடங்கிய போது பேட்ஸ்மேன் ஓடத் தொடங்கினார். உண்மையில் பந்து வீச்சாளர் ரிலீஸ் செய்தவுடன் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் ஓடலாம் என்று விதி தெளிவாகக் கூறுகிறது”

- Advertisement -

“அதே சமயம் அவர் பந்தை ரிலீஸ் செய்து விட்டால் உங்களை ரன் அவுட் செய்ய முடியாது. பந்து வீச்சாளர் ரிலீஸ் ஆனவுடன் பேட்ஸ்மேன் ஓடத் தொடங்குகிறாரா என்று நீங்கள் என்னிடம் கேட்டால் அதுவே பேட்ஸ்மேனுக்கு கிடைக்கும் ஒரு நன்மையாகும். ஏனெனில் பேட்ஸ்மேன் இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
மேலும் பந்து வீச்சாளரிடம் எத்தனை பந்துகள் திரும்பி வரும் என்பது எனக்குத் தெரியாது. ஏனெனில் டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் அரிதாகவே தற்காப்புக்காக விளையாடுகிறார்கள்” என்று கூறினார்.

Ashwin

மேலும் அதற்காக அந்த அவுட்டை வாபஸ் பெருமாறு சொல்லியிருப்பேன் என ஆடம் ஜாம்பாவை விமர்சித்த டேவிட் ஹசி பவுலர்களை அவமானப்படுத்துவது போல் பேசியதாக தெரிவிக்கும் அஷ்வின் அவருக்கு பதிலடி கொடுத்து பேசியது பின்வருமாறு. “அவர் சொன்னதை நான் நம்பவில்லை. ஏனெனில் நீங்கள் மேல்முறையீட்டை வாபஸ் பெற விரும்பினால் 3ஆம் நடுவரிடம் எடுத்துச் சென்றிருக்க வேண்டியதில்லை. அந்த மேல்முறையீட்டை 3ஆம் நடுவரிடம் சென்றதற்கு முன்பே நீங்கள் எளிதாக திரும்பப் பெற்றிருக்கலாம். முதலில் மேல்முறையீட்டை ஏன் திரும்பப் பெற வேண்டும்? ஒரு பந்து வீச்சாளர் பேட்ஸ்மேனை அவுட் செய்கிறார். அதில் பந்து வீச்சாளர் தவறு என்று கேப்டன் சொல்வார்? மேலும் அந்த அவுட்டை கேப்டன் வாபஸ் பெற்றால் அதை செய்த பவுலருக்கு மிகப்பெரிய அவமானமாகும்”

- Advertisement -

“பவுலரான நான் இந்த அவுட்டுக்கு மேல்முறையீடு செய்ததை கேப்டனோ அல்லது பயிற்சியாளரோ வாபஸ் பெறுவதாகச் சொன்னால் அது மிகவும் அவமானமாகும்.
ஏனென்றால் நீங்கள் அதைச் செய்தவுடன் ஒரு பவுலராக உங்கள் அணி உங்களுக்கு ஆதரவளிக்காத போது பந்து வீசுவதில் என்ன பயன்? எனது அணியின் கேப்டனும் பயிற்சியாளரும் என்னை ஆதரிக்கவில்லை. பின்னர் நான் ஏன் உங்களுக்கு பந்து வீசி ஆட்டத்தை வெல்ல வேண்டும்”

இதையும் படிங்கIND vs SL : 3 ஆவது போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கா? – உத்தேச பிளேயிங் லெவன் இதோ

“எனவே நீங்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்றால் பவுலர்கள் சோர்வடைவார்கள்.
மேலும் டேவிட் ஹஸ்ஸி “நீங்கள் இப்படி கிரிக்கெட் விளையாடுவது கூடாது” என்று சொன்னார். ஆனால் இப்போது இப்படித்தான் அனைவரும் கிரிக்கெட் விளையாட விரும்புகிறீர்கள். அதற்காக, “இப்போது இப்படித்தான் நீங்களும் கிரிக்கெட் விளையாட வேண்டும்” என்று நீங்கள் அனுமானித்துச் சொல்ல முடியாது. இது முற்றிலும் தவறானது” என்று கூறினார்.

Advertisement