IND vs SL : 3 ஆவது போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கா? – உத்தேச பிளேயிங் லெவன் இதோ

Hardik-Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரோஹித், கோலி, கே.எல் ராகுல் போன்ற வீரர்கள் இடம்பெறாமல் ஹார்டிக் பாண்டியாவின் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே விளையாடி வருவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டிருந்தது.

IND vs SL

- Advertisement -

இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன.

இந்நிலையில் இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று ராஜ்கோட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Shivam Mavi

அந்த வகையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் ஒரு மாற்றம் இருக்கும் என்றும் அதன்படி கடந்த போட்டியில் சற்று மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்த வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக மீண்டும் ஹர்ஷல் படேல் அணியில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது. அதனை தவிர்த்து இந்திய அணியில் வேறு ஏதும் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதே போன்று கடந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற இலங்கை அணியானது அதே அணியுடன் களம் இறங்கும் என்றே தெரிகிறது. அதன்படி இலங்கை அணிக்கு எதிரான இன்றைய மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : அந்த அளவுக்குல்லாம் இல்ல, சூரியகுமாரை ஏபிடியுடன் கம்பேர் பண்ணாதீங்க ஆனால் – இர்பான் பதான் கருத்து

1) இஷான் கிஷன், 2) சுப்மன் கில், 3) ராகுல் திரிபாதி, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) தீபக் ஹூடா, 7) அக்சர் படேல், 8) ஷிவம் மாவி, 9) உம்ரான் மாலிக், 10) அர்ஷ்தீப் சிங்/ஹர்ஷல் படேல், 11) யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement