அந்த அளவுக்குல்லாம் இல்ல, சூரியகுமாரை ஏபிடியுடன் கம்பேர் பண்ணாதீங்க ஆனால் – இர்பான் பதான் கருத்து

Irfan Pathan Suryakumar Yadav
Advertisement

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் போராடி வென்ற இந்தியா 2வது போட்டியில் போராடி தோற்றது. அதனால் 1 – 1* என சமனில் இருக்கும் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி ஜனவரி 6ஆம் தேதியன்று ராஜ்கோட் நகரில் நடைபெறுகிறது. முன்னதாக புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் 207 ரன்களை துரத்திய இந்தியா டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் 57/5 என ஆரம்பத்திலேயே சரிந்தது. அப்போது 6வது விக்கட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு போராடிய அக்சர் படேல் 65 (31) ரன்களை விளாசி கடைசி ஓவரில் அவுட்டானார்.

Suryakumar Yadav

அவருடன் பேட்டிங் செய்த நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவின் 51 (36) ரன்கள் போராட்டமும் வீணானது. பொதுவாகவே களமிறங்கிய முதல் பந்திலிருந்தே எதிரணி எப்படி பந்து வீசினாலும் சூழ்நிலை எப்படியிருந்தாலும் அடித்து நொறுக்கி அதிரடியாக ரன்களை சேர்த்து வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் சூரியகுமார் இப்போட்டியில் ஆரம்பத்தில் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இருப்பினும் கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய அவர் தனது கேரியரில் 50+ ரன்கள் கடந்தும் முதல் முறையாக இப்போட்டியில் தான் 150 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை குவிக்க முடியாமல் 141.67 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தார்.

- Advertisement -

ஏபிடி அளவுக்கு இல்ல:
ஒருவேளை வழக்கம் போல சற்று அதிரடியாக விளையாடிருந்தால் அப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருக்கலாம். இருப்பினும் முடிந்தளவுக்கு போராடிய அவரை அதற்காக குறை சொல்லவில்லை. இந்நிலையில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் குறுகிய காலத்திலே அதிரடியாக செயல்பட்டு ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முன்னேறி இந்திய ரசிகர்களால் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று கொண்டாடப்படும் சூரியகுமார் யாதவ் உலகின் முதல் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேனாக கருதப்படும் ஏபிடி வில்லியர்ஸ் உடன் ஒப்பிடும் அளவுக்கு இல்லை என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.

AB DE villiers Suryakumar Yadav

குறிப்பாக ஏபிடி, ஜோஸ் பட்லர் அளவுக்கு அதிக பவர் கொண்டு அடிக்கும் திறமை சூரியகுமாரிடம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் கட், ஸ்வீப் போன்ற ஷாட்டுகளை அடிப்பதில் வல்லவராக திகழும் சூரியகுமாருக்கு மாற்றாக டி20 கிரிக்கெட்டில் தற்சமயத்தில் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் உலகிலேயே இல்லை என்றும் அவர் பாராட்டியுள்ளார். அதாவது ஏபிடி அளவுக்கு வர முடியாது என்றாலும் தன்னுடைய அடையாளத்தில் தனக்கென்று ஒரு பாணியில் சூரியகுமார் விளையாடுவதாக இர்பான் பதான் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஏபி டி வில்லியர்ஸ் உடன் ஒப்பிடுவது மிகவும் கடினமான ஒன்றாகும். ஏனெனில் ஏபிடி’யிடம் அதிக பவர் இருப்பதாக நான் கருதுகிறேன். குறிப்பாக லாங் ஆஃப் அல்லது கவர் திசைக்கு மேல் தொடர்ச்சியாக அதிரடியாக அடிப்பதில் சூரியகுமாரை விட அவர் மிகச் சிறந்தவர். அதே போல் ஜோஸ் பட்லரை பற்றி நாம் பேசும் போது அவரும் அதிக பவருடன் அடிக்கும் திறமை பெற்றுள்ளார்”

irfan-pathan

“ஆனால் அனைத்து திசைகளிலும் அடிப்பதை பற்றி பேசினால் சூரியகுமார் மிகவும் சிறந்தவர். ஏனெனில் கட், கவர்ஸ் திசைக்கு மேல், மிட் விக்கெட் மற்றும் ஸ்வீப் போன்ற ஷாட்களை அவரால் எளிதாக அடிக்க முடியும். அதே போல் அவரிடம் ஸ்வீப் ஷாட் அடிப்பதில் 2 வகைகள் உள்ளது. அவரால் பிஹைன்ட் மற்றும் ப்ஃரண்ட் ஆஃப் விக்கெட் திசைகளில் அடிக்க முடியும். எனவே அவரிடம் பவர் குறைவாக இருந்தாலும் அனைத்து திசைகளிலும் அடிக்கும் திறமை பெரிதாக உள்ளது. அதனால் அவரைப் போன்ற ஒருவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் உங்களுக்கு கிடைக்க மாட்டார்”

இதையும் படிங்கசி.எஸ்.கே அணியில் இருப்பதால இவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறதா? என்ன கொடுமை இது – விவரம் இதோ

“அதனால் தான் கடந்த போட்டியில் அவர் 3வது இடத்தில் விளையாட கூடாது என்று நான் சொன்னேன். அவருக்கு 4வது இடமே மிகச் சிறந்த இடமாகும். ஏனெனில் அந்த இடத்தில் களமிறங்கி அவரால் ஆரம்பம் முதலே ஸ்பின்னர்களை வெளுத்து வாங்க முடியும். எனவே 4வது இடத்தில் அவரை விட உங்களுக்கு சிறந்த வீரர் கிடைக்க மாட்டார்” என்று கூறினார்.

Advertisement