சி.எஸ்.கே அணியில் இருப்பதால இவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறதா? என்ன கொடுமை இது – விவரம் இதோ

- Advertisement -

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சம நிலையில் வகிக்கின்றன. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது ஜனவரி 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.

IND vs SL

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட அணியாகவே இந்திய அணி விளையாடி வருவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோன்று இந்த இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியில் சில வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பும் வழங்கப்பட்டது.

ஆனால் இந்திய டி20 அணியில் தொடர்ச்சியாக இடம் பிடித்து வரும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு மட்டும் விளையாடும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது குறித்து ரசிகர்கள் பலரும் தங்களது வருத்தங்களை தெரிவித்துள்ளனர். அதோடு சிஎஸ்கே அணியில் இருப்பதால் தான் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

Ruturaj

ஏனெனில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் இஷான் கிஷனுக்கு ரோகித் சர்மா தொடர்ச்சியாக ஆதரவு தந்து வருகிறார். அதேபோன்று கடந்த சீசனில் குஜராத் அணிக்காக துவக்க வீரராக விளையாடி இருந்த சுப்மன் கில்லை ஆதரித்து தற்போது ஹார்டிக் பாண்டியா அவரது அணியில் அறிமுக வாய்ப்பையும் கொடுத்து தொடர்ச்சியாக விளையாட வைத்து வருகிறார்.

- Advertisement -

ஆனால் டி20 கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இந்திய அணியில் ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டு அதில் அவரது செயல்பாடு சற்று சுமாராக இருந்ததால் அவர் அணியில் இருந்தாலும் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்படாமல் இருக்கிறார்.

இதையும் படிங்க : ரொம்ப ஷார்ட் டைம்லயே பாண்டியா ஜெயிச்சிட்டாரு. அவர் ஒரு புத்திசாலி – தமிழக வீரர் அஷ்வின் புகழாரம்

இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருப்பதினால் தான் தொடர்ச்சியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறதா? என்றும் அவரைப் போன்று திறமையான வீரர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஏனெனில் அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூர் போட்டியில் கூட ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்களை பரக்கவிட்டு அதிரடி காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement