ரொம்ப ஷார்ட் டைம்லயே பாண்டியா ஜெயிச்சிட்டாரு. அவர் ஒரு புத்திசாலி – தமிழக வீரர் அஷ்வின் புகழாரம்

Hardik-Pandya-and-Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வெளியேறியது. அதன் பின்னர் தற்போது அடுத்ததாக 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு சீனியர் வீரர்களுக்கு பதிலாக ஹார்டிக் பாண்டியாவின் தலைமையிலான முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை வடிவமைத்து தற்போது இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாட வைத்து பிசிசிஐ தீவிரமான ஒரு முயற்சியை துவங்கியுள்ளது.

IND

- Advertisement -

இதன் ஒரு பகுதியாக தற்போது ஹார்டிக் பாண்டியா அணியின் கேப்டனாக செயல்படுவது மட்டுமின்றி எதிர்கால கேப்டனாக அவரே நியமிக்கப்படலாம் என்பதற்காக அவரது கேப்டன்ஷிப்பும் இந்த தொடரில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக ஹர்திக் பாண்டியா வருவதற்கு முன்னதாக தற்போதைய அவர் கேப்டன்சி தேர்வில் வெற்றி பெற்று விட்டார் என தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தனது பாராட்டுகளை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அஷ்வின் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில் :

Hardik-Pandya

ஹார்டிக் பாண்டியா குறுகிய காலத்திலேயே ஒரு கேப்டனாக வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்லலாம். ஏனெனில் மைதானத்தில் மிகவும் கூலாக இருக்கும் அவர் அணியை எப்பொழுதுமே நிதானமாக வழிநடத்தி செல்கிறார். அதுமட்டும் இன்றி போட்டியில் அடுத்தடுத்து என்ன நடைபெறும் என்பதை யோசித்து செயல்படும் அவர் புத்திசாலித்தனமான வீரராகவும் இருக்கிறார்.

- Advertisement -

ஒரு கேப்டன் என்பவர் அணியை ஒரு குழுவாக அழைத்துச் சென்று சிறப்பாக செயல்பட வைப்பது முக்கியம். அந்த வகையில் பாண்டியா மிக அற்புதமாக கேப்டன்சி செய்து வருகிறார் என்று அஷ்வின் கூறினார். மேலும் கபில்தேவுடன் அவரை ஒப்பிடுவது பற்றி பேசியிருந்த அஷ்வின் கூறுகையில் : கபில்தேவ் ஒரு சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல உலகம் கண்ட மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர்.

இதையும் படிங்க : IND vs SL : இந்தியா கோப்பை வெல்ல 3வது டி20 நடைபெறும் ராஜ்கோட் மைதானம் உதவுமா? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

என்னை பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவர் சிறந்து விளங்குவார்கள். அந்த வகையில் தற்போது பாண்டியா சிறந்த வீரராக இருக்கலாம் என்று அஷ்வின் கூறினார். நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரோடு டி20 அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அஷ்வின் அதன் பின்னர் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் இதுவரை இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement