- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சஞ்சு சாம்சன் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவரில் யார் விக்கெட் கீப்பர்? தெ.ஆ தொடரில் – விளையாடப்போவது யார்?

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாட காத்திருக்கிறது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியானது நாளை டிசம்பர் 9-ஆம் தேதி கட்டாக் நகரில் துவங்கி நடைபெற இருக்கிறது. அதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் அங்கு தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

தெ.ஆ டி20 தொடரின் விக்கெட் கீப்பர் யார்? :

இந்நிலையில் இந்த டி20 தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் தற்போதைய இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றுள்ளனர்.

- Advertisement -

அதன் காரணமாக அவர்களில் யார் இந்த டி20 தொடருக்கான விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில் சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் விளையாடுவார் என்றும் 3 முதல் 6 வரை எந்த இடத்தில் வேண்டுமானாலும் களமிறங்கி விளையாட அவர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இந்த டி20 தொடரை பொருத்தவரை சஞ்சு சாம்சனை தாண்டி ஜிதேஷ் சர்மா வாய்ப்பினை பெற அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சஞ்சு சாம்சனால் டாப் ஆர்டரில் விளையாடுவது போன்று மிடில் ஆர்டரில் களமிறங்கி அதிரடியாக விளையாட முடியவில்லை.

- Advertisement -

ஆனால் அதேவேளையில் ஜிதேஷ் சர்மா தனக்கு கிடைத்துள்ள குறுகிய வாய்ப்புகளில் ஃபினிஷராக களமிறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதன் காரணமாக தற்போது நீண்ட பேட்டிங் லைன் அப் கொண்ட இந்திய அணியில் சஞ்சு சாம்சனை சேர்ப்பதை விட ஜிதேஷ் சர்மாவை பின் வரிசையில் விளையாட வைக்க நிர்வாகம் விருப்பப்படுவதாக தெரிகிறது.

இதையும் படிங்க : சுப்மன் கில் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரில் யார் ஓப்பனர்? கேப்டன் சூரியகுமார் யாதவ் – அளித்த பதில்

எனவே சஞ்சு சாம்சனை தாண்டி ஜிதேஷ் சர்மா இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியானது நாளை டிசம்பர் 9-ஆம் தேதி கட்டாக் நகரில் இரவு 7 மணிக்கு துவங்குகிறது.

- Advertisement -