இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது டிசம்பர் 9-ஆம் தேதியான நாளை முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி கட்டாக் நகரில் நடைபெற இருக்கும் வேளையில் இரு அணியின் வீரர்களும் தற்போது அங்கு தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர். டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதான தொடர் என்பதனால் இந்திய அணிக்கு இந்த தொடரானது மிக முக்கியமான ஒரு தொடராக மாறியுள்ளது.
துவக்க வீரராக விளையாடப்போவது யார்? : சூரியகுமார் யாதவ் விளக்கம்
இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் துவக்க வீரர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே காயம் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றை தவறவிட்ட சுப்மன் கில் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
அதேவேளையில் கடந்த பல தொடர்களாகவே துவக்க வீரராக சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் அந்த இடத்துக்கு காத்திருக்கிறார். இதன் காரணமாக இந்த டி20 தொடரில் சஞ்சு சாம்சன் துவக்க வீரராக விளையாடுவாரா? அல்லது சுப்மன் கில் துவக்க வீரராக விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ள இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் இந்த டி20 தொடரில் பேட்டிங் ஆர்டர் எவ்வாறு இருக்கும்? என்பது குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : சஞ்சு சாம்சனை பொறுத்தவரை அவர் பேட்டிங் ஆர்டரில் முன்கூட்டியே விளையாட வேண்டும் என்று தான் அனைவரும் நினைக்கிறார்கள்.
ஆனால் சுப்மன் கில் தற்போது டி20 போட்டிகளில் துவக்க வீரராகவே விளையாடி வருகிறார். எனவே அவருக்கு தான் நாங்கள் துவக்க வீரருக்கான வாய்ப்பை வழங்குவோம். அதே வேளையில் சஞ்சு சாம்சன் எந்த இடத்திலும் களமிறங்கி விளையாட தயாராக இருக்கிறார். அதனால் நாங்கள் அவருக்கும் தொடர்ந்து வாய்ப்பினை வழங்குவோம்.
இதையும் படிங்க : இந்தியா – தெ.ஆ முதல் டி20: கட்டாக் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்
ஆனாலும் அவரது பேட்டிங் ஆர்டர் போட்டிக்கு போட்டி மாறுபடும். 3 ஆம் இடத்தில் இருந்து 6 வரை எங்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அங்கு விளையாடும் படி அவர் தன்னை தகவமைத்துக் கொள்வார் என்பதனால் துவக்க வீரராக சுப்மன் கில்லும், மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சனும் விளையாடுவார்கள் என சூரியகுமார் யாதவ் தெளிவுபடுத்தி உள்ளார்.



