25 வயது டெயில் எண்டரை அறிமுகப் போட்டியிலேயே ஓப்பனிங்கில் களமிறங்கியது ஏன்? சஞ்சு சாம்சன் விளக்கம்

Sanju Samson 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற 27வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது. அதனால் 5வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. முல்லான்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக அசுடோஸ் சர்மா 31 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ், ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதன் பின் சேசிங் செய்த ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் 34, ஹெட்மயர் 27* ரன்கள் அடித்து கடைசி ஓவரில் வெற்றி பெற வைத்தனர். அதனால் பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷாம் கரண், ரபடா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

ஓபனிங்கில் டெயில் எண்டர்:
முன்னதாக இந்த போட்டியில் 25 வயதாகும் டானுஷ் கோட்டியான் ராஜஸ்தானுக்காக அறிமுகமானார். ஆனால் கடந்த ரஞ்சிக் கோப்பையில் மும்பைக்காக 10வது இடத்தில் களமிறங்கி ஒரு போட்டியில் சதமடித்த ஒரே காரணத்தால் அவரை ஜோஸ் பட்லருக்கு பதிலாக சுனில் நரேன் போல சஞ்சு சாம்சன் ஓபனிங்கில் இறக்கியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

மறுபுறம் கேரியரில் பெரும்பாலும் டெயில் எண்டராக 10வது இடத்தில் விளையாடிய டானுஷ் கோட்டியான் அனுபவமற்ற ஓப்பனிங்கில் மிகவும் தடுமாற்றமாக விளையாடி 24 (31) ரன்களை 77.42 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து அவுட்டானார். அதனால் ஆரம்பத்திலேயே அழுத்தத்தை சந்தித்த ராஜஸ்தானுக்கு ரன் ரேட் அதிகரித்தது. அதே காரணத்தால் மிடில் ஆர்டரில் முக்கிய வீரர்கள் அவுட்டானதால் கடைசியில் ராஜஸ்தானின் வெற்றியும் கேள்விக்குறியானது.

- Advertisement -

ஆனால் கடைசி நேரத்தில் ஹெட்மயர் தில்லாக 27* (10) ரன்கள் அடித்ததால் ராஜஸ்தான் தப்பியது என்றே சொல்லலாம். இந்நிலையில் லேசாக காயமடைந்த பட்லர் அடுத்த போட்டிக்கு வந்து விடுவார் என்பதால் தற்போதைக்கு பேட்டிங் வரிசையை மாற்றக்கூடாது என்ற எண்ணத்துடன் டானுஷை ஓப்பனிங்கில் களமிறக்கியதாக கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர் கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு.

இதையும் படிங்க: இந்த மாதிரி முட்டாள்தனத்தை பண்ணா கோப்பை மிஸ் ஆகிடும்.. சஞ்சு சாம்சனை விளாசிய உத்தப்பா, ஜஹீர் கான்

“ஆல் ரவுண்டரான வந்துள்ள அவர் கடந்த ரஞ்சிக் கோப்பையில் அற்புதமாக விளையாடினார். அவர் வலைப்பயிற்சியில் எங்கள் அனைவரையும் இம்ப்ரஸ் செய்தார். மறுபுறம் நாங்கள் செட்டிலான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளோம். அதை நாங்கள் ஒரு போட்டிக்காக கலைக்க விரும்பவில்லை. குறிப்பாக பட்லர் அடுத்த போட்டியில் விளையாடத் தயாராகி விடுவார். எனவே அவரை டாப் ஆர்டரில் சோதித்து பார்க்க முயற்சித்தோம்” என்று கூறினார்.

Advertisement