இந்த மாதிரி முட்டாள்தனத்தை பண்ணா கோப்பை மிஸ் ஆகிடும்.. சஞ்சு சாம்சனை விளாசிய உத்தப்பா, ஜஹீர் கான்

Uthappa and Zaheer
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற 27வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீசியது. அதனால் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. மறுபுறம் 4வது தோல்வியை பதிவு செய்த பஞ்சாப் பெரிய பின்னடைவை சந்தித்தது.

முன்னதாக இந்த போட்டியில் ராஜஸ்தானின் நட்சத்திர துவக்க வீரர் ஜோஸ் பட்லர் காயத்தால் விளையாடவில்லை. மறுபுறம் 25 வயதாகும் இளம் வீரர் டானுஷ் கோட்டியான் ராஜஸ்தானுக்காக இப்போட்டியில் அறிமுகமானார். குறிப்பாக கடந்த ரஞ்சிக் கோப்பையில் 10வது இடத்தில் களமிறங்கிய அவர் சதமடித்து மும்பை வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஆனால் அந்த ஒரே காரணத்திற்காக இப்போட்டியில் பட்லருக்கு பதிலாக அவரை ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் ஓபனிங்கில் களமிறக்கி விட்டார்.

- Advertisement -

தேவையற்ற முடிவு:
மறுபுறம் தன்னுடைய கேரியரில் பெரும்பாலும் டெயில் எண்டராக விளையாடிய டானுஷ் கோட்டியான் ஓப்பனிங்கில் மிகவும் தடுமாறி 77.42 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 24 (31) ரன்களில் அவுட்டானார். அதனால் ஆரம்பத்திலேயே அழுத்தத்தை சந்தித்த ராஜஸ்தானுக்கு ரன்ரேட் அதிகரித்த நிலையில் மிடில் ஓவர்களில் ரியன் பராக், துருவ் ஜுரேல் அவுட்டானதால் வெற்றி கேள்விக்குறியானது.

இருப்பினும் கடைசி நேரத்தில் சிம்ரோன் ஹெட்மேயர் அதிரடியாக 27* (10) ரன்கள் அடித்ததால் தப்பிய ராஜஸ்தான் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் சஞ்சு சாம்சனின் இந்த முடிவைப் பற்றி ராபின் உத்தப்பா ஜியோ சினிமா சேனலில் விமர்சித்தது பின்வருமாறு. “அவர்கள் இந்த போட்டியில் நிறைய பாடங்களை கற்க வேண்டும். இதைத்தான் ஒவ்வொரு சீசனிலும் அவர்கள் செய்கின்றனர்”

- Advertisement -

“ஒரு திடமான அணியாக புள்ளிப்பட்டியலில் மேலே இருக்கும் அவர்கள் இது போன்ற முட்டாள்தனத்தை செய்ய தேவையில்லை. ஆனால் ஒவ்வொரு சீசனிலும் இது போன்ற ஏதாவது ஒன்றை அவர்கள் செய்யும் எல்லோரையும் இப்படி குழப்புகிறார்கள். கோட்டியான் ஓப்பனிங்கில் வந்ததை வர்ணனையாளராக பார்த்து நான் திகைத்துப் போனேன். இதில் என்ன லாஜிக் உள்ளது? அறிமுகப்போட்டியில் விளையாடும் அந்த இளம் வீரரை இப்படி அழுத்தமான சூழ்நிலையில் தள்ளக்கூடாது” என்று கூறினார்.

இதையும் படிங்க: மும்பை வான்கடே மைதானத்தில் இதுதான் தோனிக்கு கடைசி மேட்ச்.. மும்பை ரசிகர்கள் வைத்த நெகிழவைக்கும் வேண்டுகோள்

அது பற்றி ஜஹீர் கான் பேசியது பின்வருமாறு. “இந்த சேசிங்கில் என்ன செய்யக்கூடாது என்பதை அவர்கள் காண்பித்தனர். 10வது இடத்தில் விளையாடும் பேட்ஸ்மேனை முதல் போட்டியிலேயே அவர்கள் ஓப்பனிங்கில் களமிறக்கியது அவர்களுடைய 2 புள்ளிகளை பாதித்திருக்கலாம். அதை அவர்கள் செய்யாமல் இருந்திருந்தால் ஹெட்மயர் இப்படி விளையாடியிருக்க வேண்டியதில்லை. நல்ல அணியாக இருக்கும் அவர்கள் இது போன்ற முடிவுகளை எடுப்பது முக்கியமான போட்டியில் பாதிப்பை ஏற்படுத்தலாம்” என்று கூறினார்.

Advertisement