மும்பை வான்கடே மைதானத்தில் இதுதான் தோனிக்கு கடைசி மேட்ச்.. மும்பை ரசிகர்கள் வைத்த நெகிழவைக்கும் வேண்டுகோள்

Dhoni-Wankhede
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது மூன்றாவது வாரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் 27 லீக் போட்டிகள் முடிவடைந்த வேளையில் புள்ளி பட்டியலில் சென்னை அணி மூன்றாவது இடத்திலும், மும்பை அணி ஏழாவது இடத்திலும் இருக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 29-வது லீக் போட்டியானது இன்று நடைபெற உள்ளது.

அதன்படி ஏப்ரல் 14-ஆம் தேதியான் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு துவங்க இருக்கும் இந்த 29-ஆவது லீக் போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அனியும் மோத இருக்கின்றன.

- Advertisement -

பெரும் பலம்வாய்ந்த இரு அணிகள் இந்த போட்டியில் மோதுவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இவ்வேளையில் சி.எஸ்.கே அணியின் முன்னாள் கேப்டனான தோனிக்கு இதுவே மும்பை வான்கடே மைதானத்தில் கடைசி போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் கடந்த 2019-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வரும் வேளையில் தற்போது 42 வயதாகும் அவர் இனியும் தொடர்ந்து விளையாட முடியாது என்பதனால் இந்த தொடரே அவருக்கு கடைசி தொடராக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் இந்த தொடரின் பிளேஆப் சுற்று போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி ஆகியவை வான்கடே மைதானத்தில் நடைபெறாது என்பதனால் தோனிக்கு வான்கடே மைதானத்தில் இதுதான் கடைசி போட்டிக்காக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டி பெரியளவில் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க : நல்லா ட்ரை பண்ணி இப்படி தோத்தது கஷ்டமா இருக்கு.. தோல்விக்கு இதுதான் காரணம் – சாம் கரண் பேட்டி

இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கு முன்னதாக ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக தோனிக்கு ஒரு வேண்டுகோளை முன் வைத்துள்ளனர். அந்த வகையில் 2011-ஆம் ஆண்டு தோனி இதே வான்கடே மைதானத்தில் தான் இறுதிப் போட்டியில் சிக்ஸ் அடித்து உலககோப்பையை வென்று கொடுத்தார். எனவே ரசிகர்களுக்காக அவர் கடைசியாக ஒரு முறை இந்த மைதானத்தில் களமிறங்கி பேட்டிங் செய்ய வேண்டும் என்று தங்களது அன்பு வேண்டுகோளை முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement