வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் அங்கு நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை மூன்றுக்கு இரண்டு (3-2) என்ற கணக்கில் இழந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பும்ரா தலைமையிலான இந்திய அணியானது அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவில் எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் எந்தெந்த வீரர்கள் இடம்பெற போகிறார்கள்? என்பது குறித்த எதிர்பார்ப்பு நிலவி வரும் வேளையில் எதிர்வரும் ஆசியக் கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படும் வீரர்களில் பெரும்பாலானோர் உலகக்கோப்பை தொடரிலும் இருப்பார்கள் என்பதனால் ஆசிய கோப்பை தொடருக்கான அணி தேர்வின் மீது அனைவரது கவனமும் சென்றுள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் ஆசிய கோப்பை அணியில் மட்டுமின்றி உலகக் கோப்பை அணியில் இருந்தும் நீக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் சஞ்சு சாம்சனுக்கு கடைசியாக சில வாய்ப்புகள் கொடுக்கப்படும் அதிலும் அவர் சோபிக்கவில்லை என்பதனால் இந்திய அணில் இருந்து நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதன்படி வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம்பிடித்திருந்த சஞ்சு சாம்சன் ஒரே ஒரு அரை சதத்தை மட்டும் தான் அடித்துள்ளார். அதனை தவிர்த்து மற்ற போட்டிகளில் அவர் தனது திறமையை நிரூபிக்க தவறியதால் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட உள்ளார் என்று கூறப்படுகிறது.
அதேவேளையில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் மிகச் சிறப்பான வீரர்கள் என்பதனால் அவர்கள் ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் காயத்தில் உள்ள முன்னணி வீரர்களின் நிலைமை கண்காணிக்கப்படும் என்றும் அவர்களின் உடற்தகுதியை பொருத்தே ஆசிய கோப்பை தொடரின் அணித்தேர்வு அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அவங்களயே எதிர்கொண்ட எங்களுக்கு பும்ரா’ல்லாம் ஒரு மேட்டரே கிடையாது – 2023 ஆசிய கோப்பை முன்பாக பாக் வீரர் அதிரடி
இதன்மூலம் எப்படியாவது உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்ததாக வேண்டும் என்று போராடி வந்த சஞ்சு சாம்சனின் பயணம் இந்த தகவலோடு முடிவுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக இந்த முறையும் சஞ்சு சாம்சனின் உலகக் கோப்பை கனவு தகர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.