அவங்களயே எதிர்கொண்ட எங்களுக்கு பும்ரா’ல்லாம் ஒரு மேட்டரே கிடையாது – 2023 ஆசிய கோப்பை முன்பாக பாக் வீரர் அதிரடி

- Advertisement -

ஆசிய கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை 2023 தொடர் வரும் செப்டம்பர் 30 முதல் பாகிஸ்தானில் துவங்குகிறது அதேபோல உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த 2 முக்கியமான தொடர்களிலும் சாம்பியன் பட்டங்களை வென்று வெற்றி வாகை சூடுவதற்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இறுதிக்கட்டமாக தயாராகி வருகிறது. அதில் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இன்னும் குணமடையாமல் இருந்தாலும் ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்து அயர்லாந்து டி20 கிரிக்கெட் தொடரில் கேப்டனாக களமிறங்க உள்ளது இந்தியாவுக்கு புதிய தெம்பை ஊட்டுவதாக அமைகிறது.

ஏனெனில் 2016இல் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே தம்முடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனால் உலகின் பெரும்பாலான எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து நிலையான இடத்தைப் படித்த அவர் 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகிறார். குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் போட்டியின் எந்த நேரத்திலும் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி விக்கெட்டை எடுத்து வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய அவர் இல்லாதது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையை தொடர்ந்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் தோல்வியை கொடுத்தது.

- Advertisement -

ஈஸியா பேஸ் பண்ணுவோம்:
இருப்பினும் ஒரு வழியாக 11 மாதங்களாக குணமடைந்து முழுமையாக தயாராகியுள்ள அவர் தற்போது அயர்லாந்து டி20 தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களின் மண்டை மற்றும் கால்களை பதம் பார்க்கும் வகையில் வலைப்பயிற்சியில் பந்து வீசியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதனால் நிச்சயமாக இந்த ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய அச்சுறுத்தலை கொடுத்து அவர் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றுவார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஷாஹின் அப்ரிடி, நசீம் ஷா, முகமது ஹரிஷ் போன்ற உலகத்தரம் வாய்ந்த தங்களது பவுலர்களை வலைப்பயிற்சியில் சிறப்பாக எதிர்கொண்ட தங்களுக்கு பும்ரா உள்ளிட்ட எந்த எதிரணியின் பவுலர்களையும் எதிர்கொள்வதிலும் பயமில்லை என பாகிஸ்தான் வீரர் அப்துல்லா சபிக் அதிரடியாக பேசியுள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி பின்வருமாறு. “வலைப்பயிற்சியில் நீங்கள் ஹரிஷ், நசீம், ஷாஹீன் போன்றவர்களை அனைத்து நேரங்களிலும் எதிர்கொண்டிருப்பீர்கள்”

- Advertisement -

“அதனால் எதிரணி பவுலர்களை எதிர்கொள்வது உங்களுக்கு எப்படி இருக்கும்? குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக எப்படி செயல்படுவீர்கள். அதிலும் ஜஸ்ப்ரித் பும்ரா தற்போது ஆசிய கோப்பையில் கம்பேக் கொடுக்க உள்ளார்” என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அப்துல்லா சபிக் பதிலளித்தது பின்வருமாறு. “எங்களுடைய பவுலிங் அட்டாக் மிகச் சிறப்பாக இருக்கிறது. சொல்லப்போனால் அது தான் உலகத்திலேயே சிறந்ததாக இருக்கிறது. நாங்கள் ஷாஹீன், நசீம், ஹரிஷ் ஆகியோரை வலைப்பயிற்சியில் சிறப்பாக எதிர்கொண்டுள்ளோம்”

“அவர்களுடைய சவாலான ஸ்பெல்களை நாங்கள் ஒரே சமயத்தில் எதிர்கொண்டுள்ளோம். அது எங்களுடைய தயாராகும் பயணத்தில் எங்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுப்பதாக அமைந்துள்ளது. எனவே அவர்களுக்கு எதிராக எங்களால் சிறப்பாக செயல்பட முடியும் பட்சத்தில் இந்தியா போன்ற எதிரணி பவுலர்களுக்கு எதிராகவும் அபாரமாக செயல்படும் அளவுக்கு எங்களிடம் அதிகமான தன்னம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க:IND vs IRE : விடாமுயற்சிக்கு பலனாக ரிங்கு சிங்கிற்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம் – ரசிகர்கள் வாழ்த்து

இது மட்டுமல்லாமல் தற்போது அடிக்கடி கேப்டன்களை மாற்றுவது, வீரர்களை சோதிப்பது போன்ற அம்சங்களால் செட்டிலாகமல் தடுமாறும் இந்தியாவை இந்த ஆசிய மற்றும் உலகக் கோப்பைகளில் நன்கு செட்டிலாகியுள்ள அணியான பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்று சர்ப்ராஸ் நவாஸ், டேனிஷ் கனேரியா போன்ற நிறைய முன்னாள் வீரர்களும் உறுதியாக தெரிவித்து வருகின்றனர். எனவே அவை அனைத்திற்கும் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி கண்டியில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியிலும் அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறும் உலக கோப்பை போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement