IND vs IRE : விடாமுயற்சிக்கு பலனாக ரிங்கு சிங்கிற்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம் – ரசிகர்கள் வாழ்த்து

Rinku-Singh
- Advertisement -

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை மூன்றுக்கு இரண்டு (3-2) என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து அந்த அணியில் இடம் பெற்றிருந்த ஹார்டிக் பாண்டியா, சுப்மன் கில், இஷான் கிஷன், அக்சர் பட்டேல் என அனைவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து தற்போது பும்ரா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த அயர்லாந்து சுற்றுப்பணத்தில் இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் அந்த அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியில் ஏகப்பட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங்குக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 14 போட்டியில் விளையாடிய அவர் 150 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 474 ரன்கள் குவித்துள்ளார்.

அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணியில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அயர்லாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதன்படி ஆகஸ்ட் 18-ஆம் தேதி நாளை நடைபெறவுள்ள முதலாவது டி20 போட்டியில் நிச்சயம் அறிமுக வாய்ப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது வாய்ப்புக்காக காத்திருந்த வேளையில் அவரது விடாமுயற்சிக்கும் கடின உழைப்பிற்கும் பலனாக இந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்க உள்ளது.

இதையும் படிங்க : 2023 உ.கோ : கொஞ்சம் மாத்தி யோசிங்க, 4வது இடத்தில் விளையாட யாருமே எதிர்பாராத – நட்சத்திர வீரரை பரிந்துரைக்கும் ரவி சாஸ்திரி

ஏற்கனவே இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடப்போவதே என் கனவு என்று கூறியிருந்த ரிங்கு சிங்கின் கனவு நாளை மெய்யாகப் போவதை நினைத்து ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement