IND vs NZ : சஞ்சு சாம்சனுக்கு ஒருநாள் போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காதாம் – பி.சி.சி.ஐ செய்துள்ள சூழ்ச்சி

Sanju-Samson
- Advertisement -

இந்திய அணியில் நீண்ட நாட்களாகவே சஞ்சு சாம்சன் நிராகரிக்கப்பட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வரும் ஒரு விடயமாக இருக்கிறது. அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது உச்சகட்ட திறனை அவர் வெளிப்படுத்தினால் கூட இந்திய அணியில் அவருக்கான வாய்ப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்படுவதில்லை. குறிப்பாக 2015 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான சஞ்சு சாம்சன் இதுவரை இந்திய அணிக்காக 16 டி20 மற்றும் 10 ஒருநாள் போட்டிகள் என மொத்தம் 26 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

Sanju Samson

- Advertisement -

ஏகப்பட்ட திறமைகளை தன்னுள் வைத்திருக்கும் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் என்பதோடு மட்டுமின்றி அவர் ஒரு பவர் ஹிட்டராக அறியப்பட்டு வருகிறார். ஆனாலும் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே இந்திய அணியின் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு ஆதரவாக பேசிவரும் வேளையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது பெரிய அளவில் பேசுபொருளாக மாறி இருந்தது.

இந்நிலையில் நாளை துவங்கவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது. மேலும் பிசிசிஐ இதில் மறைமுகமாக ஒரு சூழ்ச்சியை செய்துள்ளதாகவும் தற்போது ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக தவான் மற்றும் கில் ஆகியோர் விளையாடுவது உறுதி என்கிற வேளையில் மீதமுள்ள நான்கு இடங்களில் மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

Sanju Samson

இதனால் சஞ்சு சாம்சனுக்கு மிடில் ஆர்டரில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. அதோடு குறிப்பாக சஞ்சு சாம்சன் நிச்சயம் விளையாட மாட்டார் என்பதற்கான காரணம் யாதெனில் : விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க வேண்டுமெனில் மற்றொரு விக்கெட் கீப்பரை வெளியேற்ற வேண்டும். ஆனால் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்க்கு கூடுதலாக துணை கேப்டன் பதவியையும் பிசிசிஐ வழங்கி உள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக தவான் மற்றும் பண்ட் ஆகியோர் இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் விளையாடுவார்கள். எனவே துணைக்கேப்டனான அவரை கட்டாயம் அணியிலிருந்து வெளியேற்ற முடியாது. அப்படி அவரை வெளியேற்ற முடியாது என்கிற காரணத்தினால் சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பும் கிடைக்காது. எனவே ரிஷப் பண்டிற்கு துணை கேப்டன் பதவி வழங்கி சாம்சனுக்கு பிசிசிஐ செக் வைத்துள்ளதாக ரசிகர்கள் கடும் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : வீடியோ : ஒருநாள் தொடருக்கு முன்பாக ஸ்பெஷல் ரசிகருக்கு மொத்த இந்திய அணியினரும் கொடுத்த நெஞ்சை தொடும் பரிசு

ஒருவேளை இவற்றையெல்லாம் தாண்டி சஞ்சு சாம்சனுக்கு ஆடும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமெனில் ஷ்ரேயாஸ் ஐயர் அல்லது சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேறினால் தான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement