போராடி என்ன பயன் – சஞ்சு சாம்சனை விமர்சிக்கும் முன்னாள் பாக் வீரர், உங்க அணியை பார்க்குமாறு ரசிகர்கள் பதிலடி

Sanju Samson
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரன் முதல் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி தோற்றது. அக்டோபர் 6ஆம் தேதியன்று லக்னோவில் மழையால் 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 249/4 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஹென்றிச் க்ளாஸென் 74* (65) ரன்களும் டேவிட் மில்லர் 75* ரன்களும் குயிட்டான் டீ காக் 48 (54) ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 250 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் தவான் 4, கில் 3, ருதுராஜ் 19, இஷான் கிசான் 20 என டாப் 4 பேட்ஸ்மேன்கள் மெதுவாக விளையாடி சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

அதனால் 17.4 ஓவரில் 51/4 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்று திண்டாடிய இந்தியாவுக்கு அடுத்ததாக களமிறங்கி அதிரடி காட்டிய ஷ்ரேயஸ் ஐயர் 8 பவுண்டரியுடன் 50 (37) ரன்கள் குவித்து போராடி அவுட்டானார். அவருடன் மறுபுறம் விளையாடிய சஞ்சு சாம்சன் ஷர்துல் தாகூருடன் இணைந்து 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை தூக்கி நிறுத்த முயற்சித்தார். அதில் தாகூர் 33 (31) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடிய சஞ்சு சாம்சன் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 86* (63) ரன்கள் எடுத்து போராடினார்.

பயனற்ற இன்னிங்ஸ்:
இருப்பினும் 40 ஓவர்களில் 240/8 ரன்களை மட்டுமே எடுத்த இந்தியா பரிதாபமாக தோற்றது. மறுபுறம் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் முக்கிய நேரங்களில் அசத்திய தென்ஆப்பிரிக்கா டி20 தொடரின் தோல்விக்கு பதிலடியாக வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இப்போட்டியில் 51/4 என்ற மோசமான நிலைமையில் களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் கடைசி ஓவர் வரை வெற்றிக்காக போராடிய சஞ்சு சாம்சன் அனைவரிடன் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

Sanju Samson Tabriz Shamsi

இருப்பினும் அந்த அதிரடியை ஆரம்பம் முதலே காட்டியிருந்தால் இந்தியா எளிதாக வென்றிருக்கும் எனக்கூறும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் பெரிய அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாட சஞ்சு சாம்சனுக்கு போதிய அனுபவமில்லை என்பதை இப்போட்டி காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். மறுபுறம் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி 50 (37) ரன்களைக் குவித்து திருப்பு முனையை ஏற்படுத்த முயன்ற ஸ்ரேயாஸ் ஐயர் பெரிய அணிகளுக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்ற அனுபவம் கொண்டுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றிய தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சஞ்சு சாம்சன் ஆரம்பத்தில் தனக்கான நேரத்தை எடுத்துக் கொண்டார். இருப்பினும் ஆரம்பம் முதலே அவர் அதிரடியை காட்டியிருந்தால் கதையே தலைகீழாக மாறியிருக்கும். இப்போட்டியில் 86 ரன்கள் குவித்தாலும் அவர் சந்தித்த முதல் 30 – 35 பந்துகளில் ரன்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பேட்டிங் செய்யவில்லை. மேலும் இது போன்ற பெரிய அணிகளுடன் விளையாடும்போது அனுபவமில்லாமல் அவர் தடுமாறுகிறார்”

Kamran

“மறுபுறம் ஷ்ரேயஸ் ஐயர் ஒரு அனுபவமிக்க பேட்ஸ்மென் இதுபோன்ற முக்கிய சூழ்நிலையில் எப்படி விளையாட வேண்டும் என்பதை காட்டினார். குறிப்பாக அதிரடியாக விளையாடி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்திய அவர் சிறப்பாக செயல்பட்டார். ஒரு வேளை அவர் மட்டும் அவுட்டாகாமல் இருந்திருந்தால் இந்தியா எளிதாக வென்றிருக்கும். ஏனெனில் இந்த இலக்கு எட்டக் கூடியதாக இருந்தது. அத்துடன் ருதுராஜ் – இஷான் கிசான் ஆகியோர் மிகவும் மெதுவாக விளையாடினார்கள்.

- Advertisement -

இப்போட்டி 40 ஓவர்களாக நடைபெற்ற நிலையில் அவர்கள் ஆரம்பத்திலேயே இன்னும் சற்று அதிரடியாக விளையாடி ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்திருந்திருக்க வேண்டும். அதனால் ஆரம்பத்தில் அவர்கள் மெதுவாக விளையாடாமல் போயிருந்தால் நிச்சயம் இந்தியா வென்றிருக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : என்னதான் சொல்லுங்க அந்த இடத்தில் சஞ்சு சாம்சன் சுயநலமாக செயல்பட்டார் – ரசிகர்கள் அதிருப்தி, நடந்தது என்ன?

இருப்பினும் 51/4 என திண்டாடினாலும் அதன் பின் மீண்டெழுந்து வெறும் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கும் அளவுக்கு இந்திய பேட்டிங்கின் மிடில் ஆர்டர் ஓரளவு நன்றாக இருக்கும் நிலையில் சஞ்சு சாம்சனும் ஆரம்பத்திலேயே வேகமாக விளையாடி விக்கெட்டை விட்டிருந்தால் இந்தியா மோசமாக தோற்றிருக்கும் என்று இந்திய ரசிகர்கள் கூறுகின்றனர். அதனால் எங்களைப்பற்றி கவலைப் படாமல் பாதாளத்தில் திண்டாடும் பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பற்றி சிந்திக்குமாறு அவருக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர்.

Advertisement