முதல் ஒன்டே : அவர் மேட்ச் வின்னர்னு நிரூபிச்சுக்காரு, சாம்சன் – பண்ட் தேர்வில் டிகே ஆதரவு கொடுப்பது யாருக்கு

Sanju Samson DInesh Karthik Rishabh Pant
Advertisement

நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையில் மழைக்கு மத்தியில் 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இளம் இந்திய அணி அடுத்ததாக ஷிகர் தவான் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்குகிறது. சமீபத்திய உலகக் கோப்பையில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்த கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடரில் வாய்ப்பு பெற்றுள்ள இளம் வீரர்கள் நவம்பர் 25ஆம் தேதியன்று நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

IND vs NZ Kane Willamson Shikar Dhawan

ஏனெனில் 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் ஐசிசி 50 ஓவர் உலக கோப்பைக்கு இத்தொடரிலிருந்து தயாராகும் இந்தியா அதற்கு தேவையான வீரர்களையும் இப்போது முதல் தேர்ந்தெடுக்க உள்ளது. அதனால் இத்தொடரில் எந்தெந்த இளம் வீரர்கள் வாய்ப்பு பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில் நிறைய முன்னாள் வீரர்கள் தங்களுடைய சிறந்த 11 பேர் அணியை தேர்வு செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தன்னுடைய அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

சிறப்பான அணி:

நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் 4 போட்டியில் வாய்ப்பு பெற்று சுமாராகவே செயல்பட்ட அவருடைய கேரியர் முடிந்ததாக கருதப்படும் நிலையில் மீண்டும் வர்ணனையாளராக செயல்பட துவங்கியுள்ளார். அந்த நிலையில் இத்தொடருக்கான பிளேயிங் லெவனை வெளியிட்டுள்ள தினேஷ் கார்த்திக் டி20 தொடரில் ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிய சஞ்சு சாம்சனை முக்கிய வீரராக தேர்வு செய்துள்ளார். கடந்த 2015இல் அறிமுகமாகி 2வது போட்டியை 4 வருடங்கள் கழித்து 2019இல் விளையாடி நிலையற்ற வாய்ப்புகளை பெற்று வரும் சாம்சன் இந்த வருடம் ஓரளவு பெற்ற வாய்ப்புகளில் அசத்தலாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் உள்ளார்.

Rishabh Pant Sanju Samson

இருப்பினும் அவரை புறக்கணிக்கும் இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து சொதப்பலாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட்டுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகிறது. ஆனாலும் தமது அணியில் புறக்கணிக்காமல் அவரை தேர்வு செய்துள்ள தினேஷ் கார்த்திக் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற முக்கிய போட்டியில் சதமடித்து வெற்றி பெற வைத்த ரிஷப் பட்ண்டையும் தேர்வு செய்துள்ளார். இது பற்றி பிரபல கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த தொடரில் ஓப்பனிங் இடத்தில் சுப்மன் கில் – ஷிகர் தவான் ஆகியோர் தான் களமிறங்குவார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. 3வது இடத்தில் ஷ்ரேயஸ் ஐயர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் 4 மற்றும் 5வது இடங்களில் சூரியகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் களமிறங்குவார்கள் என்று தோன்றுகிறது. 6வது இடத்தில் சந்தேகமின்றி சஞ்சு சாம்சன் விளையாடுவார். ஏனெனில் அவர் 6வது இடத்தில் தன்னை நிரூபித்த மிகச்சிறந்த வீரர். இவர்களைத் தொடர்ந்து 5 பவுலர்கள் உங்களது அணியில் இடம் பெறுவார்கள்”

Dinesh-Karthik-1

“அதில் ஆல் ரவுண்டர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷார்துல் தாகூர் ஆகியோர் விளையாடுவதற்கு தகுதியானவர்கள். அவர்களைத் தொடர்ந்து 3 வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடுவார்கள். அத்துடன் இந்த ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் பகுதி நேர கேப்டனாக இருப்பதால் இந்தியா நிறைய மாற்றங்களை செய்ய தயங்காது என்று நினைக்கிறேன். அதன் காரணமாக இந்த தொடரில் குறைந்தது 13 – 14 கிரிக்கெட் வீரர்கள் வாய்ப்பு பெறுவார்கள் என்று நம்புகிறேன்” என கூறினார்.

இதையும் படிங்க : சஞ்சு சாம்சனை அணியில் இருந்து கழற்றி விட்ட வாசிம் ஜாபர் – புள்ளிவிவரத்துடன் ரசிகர்கள் கொடுத்த பதிலடி இதோ

அவர் கூறுவது போல தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்தால் அசத்துவேன் என்று நிரூபித்து வரும் சந்து சாம்சன் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 போட்டிகளிலும் அவுட்டே ஆகாமல் 116 ரன்களை விளாசி நல்ல பார்மில் இருக்கிறார். எனவே தன்னை நிரூபித்துள்ள அவருக்கு பாண்டியாவை போல் அல்லாமல் இத்தொடரில் ஷிகர் தவான் வாய்ப்பு கொடுப்பாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement