சஞ்சு சாம்சனை அணியில் இருந்து கழற்றி விட்ட வாசிம் ஜாபர் – புள்ளிவிவரத்துடன் ரசிகர்கள் கொடுத்த பதிலடி இதோ

Sanju Samson Wasim Jaffer
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு முதலில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மழைக்கு மத்தியில் சிறப்பாக செயல்பட்டு 1 – 0 என்ற கோப்பையை வென்றது. குறிப்பாக உலக கோப்பையில் தோல்வியில் சந்திக்க முக்கிய காரணமாகவே இருந்த கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுத்த அத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் அசத்திய இளம் அணி 2024 டி20 உலகக்கோப்பைக்கான பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளது. அதைத்தொடர்ந்து நவம்பர் 25ஆம் தேதியன்று துவங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் களமிறங்கும் இளம் இந்திய அணி நியூசிலாந்தை மீண்டும் அதன் சொந்த மண்ணில் சாய்க்க தயாராகி வருகிறது.

குறிப்பாக 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தேவையான இளம் வீரர்கள் இத்தொடர் முதல் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். அந்த நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர்கள் இல்லாத இத்தொடரில் விளையாடும் 11 பேர் அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. மேலும் இந்த தொடரில் தரமான திறமையான வீரர்களை தேர்வு செய்து முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

- Advertisement -

எக்ஸ்பர்ட் வேற:
அந்த வரிசையில் இணைந்த முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் முதல் போட்டிக்கான தன்னுடைய இந்திய அணியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், சூரியகுமார், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாகூர், தீபக் சஹர், அர்ஷிதீப் சிங், உம்ரான் மாலிக் என 11 வீரர்களை வெளியிட்ட அவரது அணியில் சஞ்சு சாம்சன் இல்லாததை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

சொல்லப்போனால் நடைபெற்று முடிந்த டி20 தொடரிலேயே அவருக்கு வாய்ப்பு கொடுக்காதது அனைத்து ரசிகர்களையும் கொந்தளிக்க வைத்த நிலையில் ஒருநாள் தொடரிலாவது வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் அவரை தனது அணியில் கழற்றி விட்டுள்ள வாசிம் ஜாபர் வழக்கம் போல ரிசப் பண்ட்டுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் வேண்டும் என்பதுடன் கடைசியாக கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் சதமடித்து இந்தியா கோப்பை வெல்ல உதவிய காரணத்தால் ரிஷப் பண்ட்டை அவர் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

ஆனால் அந்த ஒரு போட்டியை தவிர்த்து டி20 போல ஒருநாள் கிரிக்கெட்டிலும் 24 இன்னிங்ஸ்சில் 840 ரன்களை 36.52 என்ற சுமாரான சராசரியில் எடுத்து சுமாராகவே செயல்பட்டுள்ள ரிஷப் பண்ட்டை தேர்வு செய்து சஞ்சு சாம்சனை கழற்றி விட்டு ஒருதலை பட்சமாக தேர்வு செய்துள்ளதாக ரசிகர்கள் அவரை சாடுகிறார்கள். ஏனெனில் இதுவரை தொடர்ச்சியற்ற 10 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 294 ரன்களை 73.5 என்ற சிறப்பான சராசரியில் 106.1 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.

குறிப்பாக 2022இல் 248 ரன்களை 82.66 என்ற சிறப்பான சராசரியில் எடுத்துள்ள சஞ்சு சாம்சன் தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருப்பதாக தெரிவிக்கும் ரசிகர்கள் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து டி20 தொடர், டி20 உலக கோப்பை உட்பட சமீப காலங்களில் ரிஷப் பண்ட் சுமாரான பார்மில் இருப்பதாக விமர்சிக்கிறார்கள். அது போக 1 முதல் 7 வரை அனைத்து இடங்களிலும் ஏற்கனவே வாய்ப்பு பெற்று ரிசப் பண்ட் சொதப்பிய நிலையில் பெரும்பாலான போட்டிகளில் கொடுக்கப்பட்ட பல்வேறு இடங்களில் சஞ்சு சாம்சன் அசத்தியதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க : IND vs NZ : நாளைய முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச அணி இதோ

அத்துடன் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு கொடுக்கும் நீங்கள் ஏன் சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. அது போக சூரியகுமார் யாதவ் 4வது இடத்தில் தான் அடித்து நொறுக்குவார் என்பதை தெரிந்தும் அவரது இடத்தை ரிஷப் பண்ட்டுக்கு கொடுத்துள்ள நீங்கள் எல்லாம் என்னதான் கிரிக்கெட் வல்லுனாரோ என்றும் ரசிகர்கள் வாசிம் ஜாபர் மீது அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.

Advertisement