வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பினை வழங்கியது ஏன்? டாசுக்கு பிறகு பேசிய – கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்

Shreyas Iyer and Sooryavanshi
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக துவங்கிய இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி தனது அறிமுக வாய்ப்பை பெற்றார். அயர்லாந்து தொடரின் போதே அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடந்த மூன்று போட்டிகளாக காத்திருந்த அவருக்கு இன்று சஞ்சு சாம்சனுக்கு பதிலாக துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பை வழங்கியது ஏன்? : ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்

இதன் மூலம் இந்திய அணிக்காக மிக இளம் வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனை பட்டியலில் முதலிடத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி 15 வயது 99 நாட்களுடன் வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். இப்படி இவர் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானது ரசிகரகள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த இரண்டாவது டி20 போட்டியின் போது சஞ்சு சாம்சன் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன்? என்பது குறித்து டாசின் போது இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷி உள்ளே வருகிறார். கடந்த இரண்டு மாதங்களாக அவர் விளையாடி வரும் விதத்தை நாம் அனைவரும் பார்த்துள்ளோம். உலகின் எந்த சிறந்த பவுலரையும் அவர் மிகச் சிறப்பாக அடித்து விளையாடுகிறார். அதோடு தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடும் அளவிற்கு அவர் முற்றிலுமாக தகுதி பெற்றுவிட்டார் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : வெளியேற்றப்பட்டார் சஞ்சு சாம்சன்.. வரலாறு படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி – 2 ஆவது போட்டியில் நிகழ்ந்த மாற்றம்

பயிற்சியின் போதும் அவரது ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. அதன் காரணமாகவே அவருக்கு இன்றைய போட்டியில் அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது என ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த முதல் போட்டியில் 10 பந்துகளை சந்தித்து 2 சிக்ஸர்களுடன் 14 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement