இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது ஜூலை ஒன்றாம் தேதி நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் மழை காரணமாக தடைபட்டதால் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி போட்டி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்திய அணிக்காக அறிமுகமானார் வைபவ் சூர்யவன்ஷி :
அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது ஜூலை 4-ஆம் தேதியான இன்று சற்று முன்னர் ஓல்டுடிராபோர்டு மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அந்தவகையில் இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார். இந்த ஒரு மாற்றத்தை தவிர இந்திய அணியில் வேற எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கடந்த மூன்று போட்டிகளாக சொதப்பி வந்த சஞ்சு சாம்சனுக்கு ஒரு ஓய்வு வழங்கும் வகையில் அவர் இந்த போட்டியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வைபவ் சூர்யவன்ஷியின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க : இன்னும் 60 ரன்கள் தேவை.. சுரேஷ் ரெய்னாவை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் – அபிஷேக் சர்மா
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக மிக இளம் வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையில் முதலிடத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி வைபவ் சூர்யவன்ஷி வரலாறு படைத்துள்ளார். இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



