IND vs NZ : நாளைய முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச அணி இதோ

IND-vs-NZ
- Advertisement -

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது அங்கு முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை நவம்பர் 25-ஆம் தேதி ஆக்லாந்து நகரில் துவங்கவுள்ளது.

IND vs NZ Kane Willamson Shikar Dhawan

- Advertisement -

இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த ஒருநாள் தொடரிலும் விளையாட இருக்கிறது. அதன்படி ஷிகார் தவான் தலைமையிலான இந்த இந்திய அணியில் நாளைய முதல் ஒருநாள் போட்டிக்கான பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்த உத்தேச பட்டியலை தான் இந்த தொகுப்பில் நாம் காண உள்ளோம்.

அதன்படி துவக்க வீரர்களாக ஷிகார் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்குவது உறுதி. அதேபோன்று மூன்றாவது இடத்தில் டி20 போட்டிகளில் அசத்தலாக விளையாடிய சூரியகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டிலும் மூன்றாவது வீரராக தொடர்வார் என்பது உறுதி. மேலும் நான்காவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயரும், ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், அணியின் துணை கேப்டனுமான ரிஷப் பண்ட் விளையாடுவார்.

Shardhul Thakur India Dhawan Shreyas Iyer

ஆறாவது இடத்தில் ஆல்ரவுண்டராக தீபக் ஹூடா விளையாடுவார். மேலும் பவுலர்களை பொறுத்தவரை இந்திய அணி எப்போதுமே மூன்று வேகப்பந்து வீச்சாளர் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் தான் களமிறங்கும் என்பதனால் அணியின் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களாக தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் விளையாட வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

அதனை தவிர்த்து மீதமுள்ள இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுக்கான இடங்களில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் பேட்டிங் தெரிந்த சுழற்பந்து வீச்சாளரான தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி நாளைய முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : அவர் மீண்டும் அணிக்குள் வந்ததால் என் சேன்ஸ்ஸும் போச்சு. என் கரியரும் போச்சு – வெங்கடேஷ் ஐயர் வெளிப்படை

1) ஷிகார் தவான் (கேப்டன்), 2) சுப்மன் கில், 3) சூரியகுமார் யாதவ், 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) ரிஷப் பண்ட் (து.கேப்டன்), 6) தீபக் ஹூடா, 7) வாஷிங்க்டன் சுந்தர், 8) ஷர்துல் தாகூர், 9) தீபக் சாகர், 10) அர்ஷ்தீப் சிங், 11) யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement