அவர் மீண்டும் அணிக்குள் வந்ததால் என் சேன்ஸ்ஸும் போச்சு. என் கரியரும் போச்சு – வெங்கடேஷ் ஐயர் வெளிப்படை

venkatesh iyer 1
- Advertisement -

சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக விளையாடுவதற்காக போட்டி பன்மடங்கு அதிகம் என்பதால் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அதில் வாய்ப்பை பெற முடியும். அந்த வகையில் மகாராஷ்டிராவை சேர்ந்த இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் கடந்த 2021 ஐபிஎல் தொடரின் முதல் பகுதியில் திணறிய கொல்கத்தா துபாயில் நடந்த 2வது பகுதியில் அந்நியனாக மாறி அதிரடியாக செயல்பட்டு ஃபைனல் வரை செல்வதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார். அது போக விஜய் ஹசாரே கோப்பையில் அதிரடியாக செயல்பட்ட அவரை 2021 டி20 உலக கோப்பையில் சுமாராக செயல்பட்டதால் அதிரடியாக நீக்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக இந்திய நிர்வாகமும் தேர்வுக்குழுவும் உருவாக்க முயற்சித்தது.

venkatesh

அதனால் கடந்த ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரில் அறிமுகமான அவரை அத்தொடரில் கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் வீணடித்தார் என்றே சொல்லலாம். ஏனெனில் ஆல் ரவுண்டராக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு ஒரு ஓவர் கூட பந்து வீசுவதற்கு ராகுல் வாய்ப்பு வழங்காதது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். போதாகுறைக்கு பேட்டிங்கில் சுமாராக செயல்பட்ட அவர் அடுத்ததாக கடந்த பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் பந்து வீச்சில் விக்கெட்டுகளை எடுத்து பேட்டிங்கில் 6, 7 ஆகிய இடங்களில் களமிறங்கி நல்ல ஃபினிஷராக செயல்பட்டு வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

சான்ஸ் காலியாகிடுச்சு:

அதன் காரணமாக பாண்டியாவுக்கு மாற்றாக கருதப்பட்ட அவர் ஐபிஎல் 2022 தொடரில் பார்மை இழந்து சுமாராக செயல்பட்டதால் ஆரம்பத்தில் தக்க வைத்த கொல்கத்தா நிர்வாகம் கடைசியில் பெஞ்சில அமர வைத்தது. மறுபுறம் அதே ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராகவும் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் சிறப்பாக செயல்பட்டு முதல் வருடத்திலேயே குஜராத்துக்கு கோப்பை வென்று கொடுத்த பாண்டியா மீண்டும் இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்து டி20 உலக கோப்பையிலும் விளையாடி தற்போது அடுத்த கேப்டனாகும் அளவிற்கு முன்னேறி விட்டார்.

INDia Hardik pandya

ஆனால் சுமாராக செயல்பட்ட வெங்கடேஷ் ஐயர் பாண்டியா வந்ததால் தம்முடைய வாய்ப்பு பறிபோய் விட்டதாக தற்போது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில் இந்திய அணிக்குள் நுழையும்போது உலகக்கோப்பை உட்பட நீண்ட காலம் உங்களுக்கு வாய்ப்பு கொடுப்போம் என்று ராகுல் டிராவிட் – ரோஹித் சர்மா ஆகியோர் தெரிவித்திருந்ததாக கூறும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு :

- Advertisement -

“இந்திய அணியில் யார் தான் நீண்ட காலம் விளையாட விரும்ப மாட்டார்கள்? நானும் அதை விரும்பினேன் இருப்பினும் ஹர்திக் பாண்டியா பாய் வந்ததால் அந்த வாய்ப்பு பறிபோய் விட்டதை நான் புரிந்து கொண்டுள்ளேன். ஆனால் அவர் அற்புதமாக செயல்பட்டு வருகிறார்”. “ஒவ்வொரு அணியும் அவருடைய சிறந்தவற்றை உலகக்கோப்பைக்காக தேர்வு செய்ய விரும்புவார்கள். அந்த வகையில் நானும் உலகக்கோப்பையில் இருக்க விரும்பினாலும் தேர்வு செய்யப்படாமல் போனது என்னுடைய கையில் இல்லை.

venkatesh

இந்திய அணியில் எனக்கு வாய்ப்பு கிடைத்த போது நான் உலக கோப்பையில் விளையாடுவேன் என்று நினைத்தேன். ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்காதது என்னை ஏமாற்றமடைய வைத்தது. இருப்பினும் இனிவரும் காலங்களில் சிறப்பாக செயல்படுவது எனது வேலை மற்றவை எல்லாம் கடவுளின் கையில் உள்ளது. இந்தியாவுக்கு தேர்வாகாததை பற்றி கவலைப்படாமல் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய கவனமாகும்”.

- Advertisement -

“இப்போதும் கூட ஒருநாள் மற்றும் டி20 இந்திய அணியில் என்னால் இடம் பிடித்திருக்க முடியும் ஆனால் இடையே லேசான காயத்தை சந்தித்து விட்டேன். இருப்பினும் நான் வரும் காலங்களில் சிறப்பாக விளையாடும் போது எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். மேலும் இந்திய வீரர்களுடன் தொடர்பில் இருப்பதால் இந்தியனுக்குள் மீண்டும் நுழைய என்னென்ன தேவை என்பதை நான் அறிந்துள்ளேன்.

இதையும் படிங்க : இந்திய வீரர் கே.எல் ராகுலுக்கு விரைவில் டும்.டும்.டும் – மணப்பெண் யார்? திருமணம் எப்போது?

அதுபோக என்னை தயாராக இருக்குமாறு அணியிலிருந்து செய்திகள் வந்துள்ளது. ஒருவேளை இந்திய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் ஐபிஎல் அதுவும் கிடைக்கவில்லை என்றால் மாநில கிரிக்கெட் அதுவும் கிடைக்கவில்லை என்றால் உள்ளூர் தொடர்களில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும். எனவே எதற்காகவும் நான் கவலைப்படவில்லை” என்று கூறினார்.

Advertisement