இந்திய வீரர் கே.எல் ராகுலுக்கு விரைவில் டும்.டும்.டும் – மணப்பெண் யார்? திருமணம் எப்போது?

KL-Rahul
Advertisement

இந்திய அணியின் இளம் துவக்க வீரரான கே.எல் ராகுல் கடந்த 2014-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 43 டெஸ்ட் போட்டிகள், 45 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 72 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். அது தவிர்த்து கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் கே.எல் ராகுல் இதுவரை 109 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதோடு மட்டுமின்றி லக்னோ நகரினை தலைமையாக கொண்ட ஐ.பி.எல் அணியையும் வழிநடத்தி வருகிறார்.

kl rahul

தனது கரியரின் ஆரம்பத்தில் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே.எல் ராகுல் கடந்த சில ஆண்டுகளாகவே அதிரடியான ஒரு துவக்க ஆட்டக்காரராகவும், இந்திய அணியின் துணை கேப்டனாகவும் பதவி வகித்தார் வருகிறார். இந்நிலையில் அவருக்கும் பிரபல பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டியின் மகளும், பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டிக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தற்போது உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

அதன்படி ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் இருவரும் ஒன்றாக உலகம் சுற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வருகின்றன. அதோடு இந்திய கிரிக்கெட் அணி எந்த வெளிநாட்டு தொடருக்கு சென்றாலும் ராகுலுடன் செல்லும் அதியா ஷெட்டி அண்மையில் கே.எல் ராகுல் ஜெர்மனியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது கூட அவருடன் உறுதிணையாக இருந்தார்.

Athiya Shetty

இந்நிலையில் தற்போது டி20 உலக கோப்பையில் பங்கேற்ற கே.எல் ராகுல் நாடு திரும்பி ஓய்வில் இருக்கும் இவ்வேளையில் அவரது திருமணம் குறித்த உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இவர்கள் இருவருக்கும் வருகிற ஜனவரி மாதம் நெருங்கிய உறவினர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திருமணமானது மும்பையில் உள்ள சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இது குறித்து திரைப்பட விழா ஒன்றில் பங்கேற்ற சுனில் ஷெட்டி பேசுகையில் : இன்னும் மூன்று மாதங்களில் என் மகளின் திருமணத்திற்காக உங்களை அழைப்பேன் என நினைக்கிறேன் என்று தனது மகளின் திருமணம் குறித்த முக்கிய தகவலை நிருபர்களிடம் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : எத்தனை காலம் தான் ராகுலையே உருட்டுவீங்க, 2023 உ.கோ வெல்ல அந்த இளம் வீரருக்கு சான்ஸ் கொடுங்க – டேனிஷ் கனேரியா கோரிக்கை

அவரது இந்த பேட்டியின் மூலம் கே.எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி ஆகியோரது திருமணம் வரும் ஜனவரி அல்லது மார்ச் மாதம் நடைபெறும் என்பது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே அண்மையில் அதியா ஷெட்டியின் பிறந்தநாள் அன்று “என்னுடைய உலகத்தை மிகவும் அழகாக மாற்றியதற்கு நன்றி” என தனது காதலிக்கு ஹார்டின் உடன் கூடிய வாழ்த்தினை கே.எல் ராகுல் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement