எத்தனை காலம் தான் ராகுலையே உருட்டுவீங்க, 2023 உ.கோ வெல்ல அந்த இளம் வீரருக்கு சான்ஸ் கொடுங்க – டேனிஷ் கனேரியா கோரிக்கை

Danish Kaneria KL Rahul
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக நியூசிலாந்தில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. உலக கோப்பையில் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் சுமாராக செயல்பட்டதால் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக நடைபெறும் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக புதிய அணியை உருவாக்கும் முயற்சியை துவங்கியுள்ளது. குறிப்பாக டி20 உலக கோப்பையில் அதிரடி தொடக்கத்தை கொடுக்க வேண்டிய ரோஹித் சர்மா – கேஎல் ராகுல் ஆகிய ஓப்பனிங் ஜோடி தடவலாக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் அடுத்த ஐசிசி தொடருக்கு முன்பாக புதிய அதிரடி ஓப்பனிங் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

KL Rahul Lungi Nigidi

- Advertisement -

அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா கூட அவ்வப்போது தடுமாறினாலும் முக்கிய நேரங்களில் பெரிய ரன்களை குவிப்பராக திகழ்கிறார். ஆனால் சாதாரண இருதரப்பு தொடர்களில் அதிரடியாக செயல்படும் கேஎல் ராகுல் ஆசிய கோப்பை, உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் அழுத்தமான போட்டிகளில் தொடர்ந்து சொதப்பலாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக கத்துக்குட்டி அணிகளை அடித்து நொறுக்கும் அவர் பெரிய அணிகளுக்கு எதிராக பெட்டி பாம்பாக அடங்குவதாக ரசிகர்கள் புள்ளி விவரங்களுடன் நிரூபிக்கின்றனர்.

ராகுலை மாத்துங்க:

அந்த நிலையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து டி20 தொடரில் இஷான் கிசான் – ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓப்பனிங் இடத்தில் வாய்ப்பு கொடுப்பட்டது. அதில் ராகுலை விட அந்த ஜோடி தடவியதால் சஞ்சு சாம்சன், சுப்மன் கில், பிரிதிவி ஷா போன்ற இதர திறமையான வீரர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். இருப்பினும் எது எப்படி இருந்தாலும் 2023இல் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பையில் மீண்டும் ராகுல் – ரோகித் ஜோடி தான் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Shuman Gill

ஆனால் 2023 உலக கோப்பையை வெல்ல இளம் வீரர் சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்க வேண்டுமென முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார். 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருதை வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் மறக்க முடியாதா காபா வெற்றியில் 91 ரன்களை குவித்து அசத்திய பின் காயத்தால் வெளியேறினார். அதன் பின் குணமடைந்து 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஒருநாள் தொடர்களில் அடுத்தடுத்த தொடர் நாயகன் விருதுகளை வென்று இந்தியா அடுத்தடுத்த வைட்வாஷ் வெற்றிகளை பதிவு செய்ய முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

அதனால் அடுத்து நடைபெறும் நியூசிலாந்து ஒருநாள் தொடரிலும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் உலக கோப்பையிலும் களமிறங்க வேண்டுமென தெரிவிக்கும் கனேரியா இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “2023 உலக கோப்பையை கருத்தில் கொண்டு இந்தியா சுப்மன் கில்லை பார்க்க வேண்டும். அவர் சிறந்த வீரர். ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து கேப்டனாக செயல்படுவார் என்று நிலைமையில் உலகக் கோப்பையை வெல்ல அவருக்கு நல்ல வீரர்கள் தேவை. குறிப்பாக ராகுலுக்கு ஏற்கனவே அதிகப்படியான வாய்ப்புகள் கொடுத்தும் அவர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படவில்லை”

Kaneria

“ஆனால் சுப்மன் கில், சஞ்சு சாம்சன், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் தொடர்ச்சியான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதே சமயம் ரோகித் சர்மா கேப்டனாக சுமாரானவர் கிடையாது. ஆனால் விராட் கோலி இருந்த போது இந்தியனில் இருந்த ஆக்ரோஷம் அவரது தலைமையிலான அணியில் இல்லை. இருப்பினும் தற்போது சூரியகுமார் போன்றவர் இருக்கும் போது இதர வீரர்களும் எனர்ஜியை வெளிப்படுத்த வேண்டும். டி20 கிரிக்கெட் கேப்டனாக பாண்டியா நல்லபடியாக தோன்றுகிறார். குறிப்பாக டி20 போட்டிகளில் இந்திய அணியின் வருங்கால கேப்டனாக தம்மால் சிறந்து விளங்க முடியும் என்பதை அவர் நிரூபித்து வருகிறார்” என்று கூறினார்.

Advertisement