
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக பங்கேற்ற சஞ்சு சாம்சன் காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட வேண்டிய சுழல் ஏற்பட்டது. இதன் காரணமாக ரியான் பராக் அந்த அணியை கேப்டனாக வழிநடத்தினார். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ரியான் பராகிற்கு நெருங்கிய உறவினர் என்பதனால் அவரை அடுத்த கேப்டனாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாக்கின. அதனால் சஞ்சு சாம்சன் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
அதோடு ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் டிராவிடும் ரியான் பராக் அடுத்த கேப்டனாக வருவதற்கு மறைமுகமாக ஆதரவு தருவதால் சஞ்சு சாம்சன் தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அவர் ராஜஸ்தான் அணியிலிருந்து வெளியேறுவார் என்ற ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.
அதுமட்டும் இன்றி தற்போது அதையும் தாண்டி ஒரு குறிப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் சஞ்சு சாம்சன் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் பகிர்ந்த ஒரு புகைப்படத்தில் : சாலை ஓரம் இருக்கும் மஞ்சள் நிற கோட்டை கடக்குமாறு ஒரு புகைப்படத்தை பகிர்ந்து “டைம் டு மூவ்” என்றும் சஞ்சு சாம்சன் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎஸ் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறி அவர் சென்னை அணிக்கு வரப்போகிறாரோ? என்ற சந்தேகத்தையும் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.
ஏற்கனவே தற்போது 43 வயதாகும் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அடுத்த சீசனில் ஓய்வு பெறுவார் என்பது உறுதியாகும் வேளையில் அந்த அணிக்கு புதிய விக்கெட் தேவை. அந்தவகையில் ஏற்கனவே உர்வில் படேல் அந்த அணியில் இருந்தாலும் அவருக்கு அனுபவம் கிடையாது. எனவே அனுபவ வீரரும், கேப்டன் பொறுப்பிறகு தகுதியானவருமான சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியில் இருந்தால் நல்லது என்று பலரும் பேசிகின்றனர்.
இதையும் படிங்க : கோலியை நெருங்க முடியாத.. ரோஹித் இங்கிலாந்தில் ஆடிருந்தா 30க்கு கிழே போய்ருப்பாரு.. ரோகோவை நிறுத்துங்க.. மஞ்ரேக்கர்
இவ்வேளையில் சிஎஸ்கே அணிக்குள் வரும் வகையில் சஞ்சு சாம்சன் மறைமுக குறிப்பை தனது பதிவின் மூலம் வெளியிட்டுள்ளார். அப்படி சஞ்சு சாம்சன் ஒருவேளை சிஎஸ்கே அணிக்கு வந்தால் அது நிச்சயம் சிஎஸ்கே அணிக்கு பலத்தை சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.