கோலியை நெருங்க முடியாத.. ரோஹித் இங்கிலாந்தில் ஆடிருந்தா 30க்கு கிழே போய்ருப்பாரு.. ரோகோவை நிறுத்துங்க.. மஞ்ரேக்கர்

Sanjay manjrekar
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் மண்ணில் இந்திய அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்பாக நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர். அவர்களுடைய ஓய்வு காரணமாக இம்முறையும் இங்கிலாந்து மண்ணில் இந்தியா வெற்றி பெறுவது கடினமாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு நிகராக ரோஹித் சர்மாவை ஒப்பிட்டு பேசுவது தவறானது என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். ஏனெனில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா எனப்படும் சேனா நாடுகளில் விராட் கோலி 12 சதங்கள் அடித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆனால் அதே நாடுகளில் வெறும் ஒரு சதம் மட்டுமே எடுத்துள்ள ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியை நெருங்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கோலியை நெருங்க முடியாது:

இம்முறை மோசமான ஃபார்மில் இருப்பதால் இங்கிலாந்தில் விளையாடியிருந்தால் ரோகித் சர்மாவின் பேட்டிங் சராசரி 30க்கும் கீழே குறைந்திருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரோஹித், விராட் கோலி இல்லாததால் இம்முறை இங்கிலாந்தில் இந்திய அணி அடுத்ததை சந்திக்கும் என்று புதிய கேப்டன் சுப்மன் கில் தெரிவித்திருந்தார். அது என்னுடைய நீண்டகால குழப்பத்தை கிளறி விட்டுள்ளது”

“அது வெறும் பேச்சாக மட்டுமல்லாமல் அவர்கள் இருவரையும் ஒன்றாக ஒரே பிரிவில் இணைக்கிறது. சொல்லப்போனால் அதற்கு “ரோகோ” என்ற பெயரையும் நாம் வைத்துள்ளோம். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நீங்கள் அவ்வாறு ஒப்பிடுவதை நான் புரிந்து கொள்கிறேன். நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்கள் இருவரையும் நான் ஒரே பிரிவில் போட மாட்டேன். அதற்காக உங்களுக்கு நான் சில நம்பர்களை கொடுக்கிறேன்”

- Advertisement -

ரோகோவை நிறுத்துங்க:

“சேனா நாடுகளில் தான் உண்மையான பேட்மேனின் தரம் மதிப்பிடப்படும். அங்கே 12 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி மொத்தம் 30 சதங்கள் அடித்துள்ளார். ஆனால் ரோகித் சர்மா ஏதேனும் ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார். சராசரி 40. ஒருவேளை இதே நிலைமையில் ரோஹித் சர்மா இங்கிலாந்தில் விளையாடியிருந்தால் அவருடைய சராசரி 30க்கும் கீழே குறைந்திருக்கும் என்று தைரியமாக சொல்வேன்”

இதையும் படிங்க: 93க்கு ஆல் அவுட்.. பெண் அம்பயருடன் வாதிட்ட அஸ்வின்.. திண்டுக்கல்லை சுருட்டி திருப்பூர் மாஸ் வெற்றி

“டெஸ்ட் போட்டிகள் என்று வரும் போது விராட் கோலி முற்றிலும் வித்தியாசமான பிரிவில் இருப்பார். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை ஒரே பிராக்கெட்டில் போடுவதை நிறுத்துங்கள். சொல்லப்போனால் ரோகோ என்று சொல்வதை நிறுத்துங்கள் என நான் சொல்வேன்” என்று கூறினார்.

Advertisement