தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2025 சீசன் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் ஜூன் எட்டாம் தேதி கோயம்புத்தூரில் இருக்கும் எஸ்என்ஆர் காலேஜ் கிரிக்கெட் மைதானத்தில் 5வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் நடப்புச் சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற திருப்பூர் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக விளையாடிய கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 18 (11) ரன்கள் அடுத்து நல்ல துவக்கத்தைப் பெற்றார். அப்போது திருப்பூர் கேப்டன் சாய் கிஷோர் வீசிய 5வது பந்து ஒயிட் போல இருந்தது. அதை அடிக்க முயற்சித்த அஸ்வின் தவற விட்டார்.
கோபமான அஸ்வின்:
உடனடியாக சாய் கிசோர் கேட்ட விக்கெட்டை களத்தில் இருந்த பெண் நடுவர் கொடுத்து விட்டார். அதனால் ஏமாற்றமடைந்த அஸ்வின் பந்து அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனுக்கு வெளியே பிட்ச்சாகி இருக்கும் என்று கருதினார். அதன் காரணமாக அவுட் கொடுத்த பெண் நடுவரிடம் சென்ற அவர் இது எப்படி அவுட்டாகும்? என்ற வகையில் வாதிட்டார். இருப்பினும் அதற்கு அந்த நடுவர் பெரியளவில் எந்த பதிலும் சொல்லாமல் சென்றார்.
அதனால் கோபமடைந்த அஸ்வின் பேட்டால் தன்னுடைய காலில் அடித்துக்கொண்டு பெவிலியன் நோக்கி சென்றார். அவருடைய கோபத்துக்கு அர்த்தம் இருக்கும் வகையில் மறுபுறம் நிதானமாக விளையாடி சிவம் சிங் 30 (27) ரன்னில் அவுட்டானார். மிடில் ஆர்டரில் விமல் குமார் 6, பாபா இந்திரஜித் 1, ஜெயந்த் 18 என மற்ற வீரர்கள் பெரிய ரன்களை எடுக்கத் தவறினார்கள்.
திருப்பூர் வெற்றி:
அதன் காரணமாக 16.2 ஓவரில் திண்டுக்கலை வெறும் 93 ரன்களுக்கு திருப்பூர் அணி சுருட்டி வீசியது. அந்த அணிக்கு கேப்டன் சாய் கிஷோர் 2, எசக்கிமுத்து 4, மதிவாணன் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்ததாக விளையாடிய திருப்பூர் அணிக்கு துவக்க வீரர் அமித் சாத்விக் 13 ரன்களில் பெரியசாமி வேகத்தில் போல்டானர். ஆனால் மற்றொரு துவக்க வீரர் துஷார் ரஹீஜா அதிரடியாக விளையாடி 65 (39) ரன்களை விளாசினார்.
இதையும் படிங்க: 6, 6, 6, 1, 6, 6.. ஸ்டுவர்ட் ப்ராட் போல் நொறுக்கப்பட்ட ரசித் மோசமான சாதனை.. வெ.இ’ஸை வீழ்த்திய இங்கிலாந்து
அவருடன் சேர்ந்து மிகவும் மெதுவாக விளையாடிய ராதாகிருஷ்ணன் 14 (21) ரன்கள் எடுத்தார். அதனால் 11.5 ஓவரில் 94/1 ரன்களை எடுத்த திருப்பூர் 9 வித்தியாசத்தில் மாஸ் பெற்றது. அதனால் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்த அந்த அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி அசத்தியது.