6, 6, 6, 1, 6, 6.. ஸ்டுவர்ட் ப்ராட் போல் நொறுக்கப்பட்ட ரசித் மோசமான சாதனை.. வெ.இ’ஸை வீழ்த்திய இங்கிலாந்து

Eng vs wi
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்று முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி ஜூன் 8ஆம் தேதி பிரிஸ்டோல் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எவின் லெவிஸ் கோல்டன் டக் அவுட்டானார். அடுத்ததாக ஜோடி சேர்ந்து 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ஷாய் ஹோப் நிதானமாக விளையாடி 49 ரன்களில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஜான்சன் சார்லஸ் அதிரடி காட்ட முடியாமல் 47 (39) ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

ஒரே ஓவரில் 31 ரன்ஸ்:

அடுத்ததாக வந்த ரூத்தர்போர்ட் 6 ரன்னில் அவுட்டான போதிலும் ரோவ்மன் போவல் அடித்து நொறுக்கி 34 (15) ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்ததாக ரொமாரியா செஃபார்ட் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஜோடி சேர்ந்தார்கள். அப்போது அடில் ரசித் வீசிய முதல் 3 பந்துகளில் 6, 6, 6 என ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்ட ஜேசன் ஹோல்டர் நான்காவது பந்தில் சிங்கிள் எடுத்தார்.

கடைசி 2 பந்துகளில் செஃபார்ட் தம்முடைய 6, 6 என 2 சிக்ஸர்களை பறக்க விட்டு அடில் ரசித் ஓவரில் மொத்தம் 31 ரன்களை எழுதினார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 2வது அதிகபட்ச ரன்கள் வழங்கிய இங்கிலாந்து பவுலர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்தார். முதலிடத்தில் 2007 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் யுவராஜ் சிங்கிற்கு எதிராக 6 சிக்ஸர்கள் உட்பட 36 ரன்கள் வழங்கிய ஸ்டுவர்ட் ப்ராட் இருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து வெற்றி:

இறுதியில் ஹோல்டர் 29* (9), செபார்ட் 19 (11) ரன்களை எடுத்த உதவியுடன் 20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 196/6 ரன்களை எடுத்தது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக லுக் வுட் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய இங்கிலாந்துக்கு பென் டக்கெட் 30 (18), ஜோஸ் பட்லர் 47 (36), கேப்டன் ஹரி ப்ரூக் 34 (20), ஜேக்கப் பேத்தல் 26 (10), டாம் பாண்டன் 30 (11) ரன்கள் எடுத்தார்கள்.

இதையும் படிங்க: ராயுடு இருக்கும் வரை அது நடக்காது.. உண்மையான தோனி கருத்து.. 2023இல் சொன்னது நிஜமான சுவாரஸ்யம்

அதனால் 18.3 ஓவரிலேயே 199/6 ரன்கள் எடுத்த இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரையும் இங்கிலாந்து ஆரம்பத்திலேயே வென்றது. மறுபுறம் அல்சாரி ஜோசப் அதிகபட்சமாக 2 விக்கெட் எடுத்தும் வெஸ்ட் இண்டீஸ் தோற்றது.

Advertisement