ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்று சாதனை படைத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமாக விளையாடி முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. மேலும் 2020, 2022, 2024க்குப்பின் வரலாற்றில் 4வது முறையாக சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாமல் வெளியேறியது.
அவை அனைத்தையும் விட வரலாற்றிலேயே முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த சென்னை அவமான சாதனையை படைத்தது. அதனால் ஏமாற்றமடைந்த சிஎஸ்கே அணிக்கு ஆயுஷ் மாத்ரே, தேவால்ட் ப்ரேவிஸ், உர்வில் படேல், நூர் அஹ்மத் போன்ற தரமான இளம் வீரர்கள் கிடைத்தது மட்டுமே ஆறுதலாக அமைந்தது. அது போக 2025 ஐபிஎல் தொடரின் ஃபேர்பிளே விருது வென்றதும் சிஎஸ்கே அணிக்கு மற்றொரு ஆறுதலாக அமைந்தது.
ஃபேர்பிளே வென்ற சென்னை:
இந்த வருடம் மோசமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த சிஎஸ்கே அணி எங்கேயும் விதிமுறைகளை மீறி ஒழுக்கமின்றி விளையாடவில்லை. அதன் காரணமாக ஹைதராபாத் அணியை முந்திய சென்னை 2025 ஐபிஎல் தொடரின் ஃபேர்பிளே விருதை வென்று அசத்தியது. இதையும் சேர்த்து வரலாற்றில் சென்னை அணி 7வது முறையாக விருதை வென்று சாதனை படைத்தது.
அத்துடன் 2015க்குப்பின் 10 வருடங்கள் கழித்து சிஎஸ்கே அணி அந்த விருதை வென்று கட்டியுள்ளது. அதன் காரணமாக அம்பத்தி ராயுடு இருக்கும் வரை சிஎஸ்கே ஃபேர்பிளே விருதை வெல்ல முடியாது என்ற எம்எஸ் தோனியின் கருத்து உண்மையாகியுள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத வீரராக அறியப்படும் ராயுடு களத்தில் கோபத்தை வெளிப்படுத்தி விடுவார்.
உண்மையான கருத்து:
அவருடைய செயல்பாடுகள் ஃபேர்பிளே ஒழுங்கீன விதிமுறைகளுக்கு எதிரானதாக இருக்கும். அதன் காரணமாக ராயுடு இருக்கும் வரை ஃபேர்பிளே விருதை சிஎஸ்கே வெல்லாது என்று தோனி கூறியிருந்தார். இது பற்றி 2023 ஐபிஎல் கோப்பையை வென்ற பின் தோனி பேசியது பின்வருமாறு. “களத்தில் எப்போதும் 100% பங்களிப்பை போடும் ராயுடு தரமான வீரர். இருப்பினும் அவரை அணியில் வைத்திருப்பதால் நான் எப்போதும் ஃபேர்பிளே விருதை வெல்ல மாட்டேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: இலவசமா கொடுத்ததை வெச்சு உழைச்சு வந்துருக்க சுதர்சன்.. வில்லியம்சன் மாதிரி அசத்துவாரு.. ஸ்டீவர்ட் பாராட்டு
அவர் சொன்னது போலவே ராயுடு விளையாடிய 2018 – 2023 வரை சிஎஸ்கே ஒருமுறை கூட அந்த விருதை வாங்கவில்லை. ஆனால் அவர் ஓய்வு பெற்ற அடுத்த வருடத்திலேயே சிஎஸ்கே அணி தோனி தலைமையில் ஃபேர்பிளே விருதை வென்றுள்ளது. 2024இல் ருதுராஜ் கேப்டனாக செயல்பட்டார். இதிலிருந்து தோனி கருத்து உண்மையானதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுவது குறிப்பிடத்தக்கது.



