இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டி ஜூன் 20ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் தலைமையிலான இளம் இந்திய அணி அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலங்களாகவே உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் அவர் 2023ஆம் ஆண்டு இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் அரை சதத்தை அடித்த அவர் 2025 ஐபிஎல் தொடரில் 759 ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். மேலும் 2023ஆம் ஆண்டு இங்கிலாந்தில் கவுன்டி தொடரில் அவர் சர்ரே அணிக்காக விளையாடி ஒரு சதத்தை அடித்து அசத்தினார்.
இலவசமாக பந்துகள்:
அதன் காரணமாக இந்திய அணிக்காக தேர்வாகியுள்ள அவர் இத்தொடரில் அறிமுகமாகிய அசத்துவார் என்று தமிழக ரசிகர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் 2023 கவுன்டி தொடரில் விளையாடிய போது சாய் சுதர்சன் இங்கிலாந்து சூழ்நிலைகளில் அசத்துவதற்காக டுக் பந்துகளை தம்முடைய சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று பயிற்சிகளை எடுத்ததாக அலெக் ஸ்டீவர்ட் தெரிவித்துள்ளார்.
அந்த பந்துகளில் பயிற்சிகளை எடுத்து கடினமாக உழைத்து இந்திய அணிக்காக தேர்வாகியுள்ள சுதர்சன் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் போல அசத்துவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னாள் இங்கிலாந்து வீரர் மற்றும் சர்ரே அணியின் இயக்குனரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சுதர்சன் வீட்டுக்கு திரும்பிய போது எங்களுடைய சில டுக் கிரிக்கெட் பந்துகளை எடுத்துச் சென்றார்”
வில்லியம்சன் போல:
“அந்த பந்துகளை நான் பணம் வாங்கமல் அவரை எடுத்துச்செல்ல விட்டேன். மிகவும் முன்னோக்கி சிந்தித்த அவர் இந்தியாவுக்காக இங்கிலாந்தில் விளையாட தேர்வு செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையுடன் அந்தப் பந்துகளில் பயிற்சிகளை எடுத்தார். அவர் பந்து மிகவும் தாமதமாக விளையாடுவார். அது தான் இங்கிலாந்தில் முக்கியமான விஷயம்”
இதையும் படிங்க: 21 ரன்ஸ் லீட்.. சிஎஸ்கே இந்திய பவுலர்கள் அசத்தல்.. இங்கிலாந்து லயன்ஸை சுருட்டிய இந்தியா ஏ
“இங்கிலாந்தில் பந்து வேகமாக வரும் போது நீங்கள் கட்டுப்பாடின்றி கடினமாக அடிக்க முயற்சித்தால் உங்களுடைய பேட் கண் பார்வைக்கு வெளியே செல்லும். ஆனால் சுதர்சன் பேட்டை தன்னுடைய கண் பார்வைக்குள் விளையாடுகிறார். அதன் காரணமாக எடுத்துக்காட்டாக கேன் வில்லியம்சன் போல சுதர்சன் எட்ஜ் கொடுத்தால் கூட அது ஸ்லிப் பகுதியில் இருக்கும் ஃபீல்டருக்கு கொஞ்சம் முன்னதாகவே விழுந்து விடும். அது சுதர்சனின் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும்” என்று கூறினார்.



