ரிஷப் பண்டிற்கு சரியான போட்டியளிக்கும் அதிரடி வீரர் – டி20 உலகக்கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்குமா?

Pant
- Advertisement -

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் முன்னணி விக்கெட் கீப்பராக அணியில் இடம் பெற்று வருகிறார். ஆனால் அதே வேளையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இவர் அதிரடியாக ஆடினாலும் தொடர்ச்சியாக ரன்களைக் குவிப்பதில் சறுக்கலை சந்தித்து வருகிறார். இருப்பினும் இந்திய அணி அவரையே முன்னிறுத்தி முதன்மை விக்கெட் கீப்பராகவும் விளையாட வைத்து வருகிறது.

Pant-3

- Advertisement -

ஆனால் தற்போது அவருக்கு போட்டியாக சஞ்சு சாம்சன் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக ரிஷப் பண்ட் டி20 கிரிக்கெட்டில் தேவையற்ற ஷாட்டுகளை விளையாடி ஆட்டமிழந்து வருகிறார். அதோடு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.

முதல் போட்டியின்போது மும்பை அணிக்கெதிராக இக்கட்டான சூழ்நிலையில் அவர் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறியது அவரது பேட்டிங் பார்மின் மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டுகிறது. அதே வேளையில் நேற்று சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 27 பந்துகளில் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 55 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார்.

Samson

இந்த ஐபிஎல் தொடரில் அவர் இனிவரும் போட்டிகளிலும் இதேபோன்று அசத்தலான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை அணியில் அவருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஒருவேளை இந்த ஐபிஎல் தொடரில் பண்ட் தொடர்ந்து சொதப்பும் வேளையில் அவருக்கு நெருக்கடி ஏற்படலாம். அதேபோன்று சிறப்பாக விளையாடும் வேளையில் சஞ்சு சாம்சன்க்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாகும் என்று தெரிகிறது. எது எப்படி இருப்பினும் நிச்சயம் உலகக்கோப்பை அணியில் பண்ட் இருப்பார் என்பதும் கூடுதல் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெற அருமையான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விராட் கோலி, விவ் ரிச்சர்ட்ஸ்ஸை கடந்து வரலாற்றில் இடம்பிடித்த பாபர் அசாம் – உலகசாதனை படைப்பு

டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் வேளையில் இந்திய அணி வீரர்கள் பலர் தற்போது சிறப்பாக விளையாடி வருவதால் நிச்சயம் உலகக்கோப்பை அணியின் தேர்வு அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும்.

Advertisement