இஷான் கிஷனிடம் இருக்கும் ஒரே பிளஸ் இதுதான். அதனால் சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்டுள்ள – பரிதாப நிலைமை

Ishan-Kishan
- Advertisement -

பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தங்களது வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருந்த வேளையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இந்திய அணி 17 பேர் கொண்ட வீரர்களின் முழு பட்டியலையும் வெளியிட்டு இருந்தது.

Ishan-Kishan-1

- Advertisement -

இந்த தொடருக்கான அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்கள் பெரும்பாலும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும் இடம் பிடிப்பார்கள் என்பதனால் இந்த அணித்தேர்வின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டிருந்தது. அந்த வகையில் அறிவிக்கப்பட்டுள்ள ஆசிய கோப்பை அணியில் காயம் காரணமாக வெளியில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோருக்கு மீண்டும் அணியில் இடம் கிடைத்துள்ளது.

அதேபோன்று பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் இந்த அணியில் இடம் பிடித்திருந்தனர். அறிமுக வீரராக திலக் வர்மாவிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்படி பல்வேறு திருப்பங்களுடன் இந்த அணி தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்த வேலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் பேக்கப் பிளேயராக எடுக்கப்பட்டது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sanju Samson

ஏனெனில் தொடர்ச்சியாக தனது நிரந்தர வாய்ப்புக்காக காத்திருக்கும் சஞ்சு சாம்சனை பேக்கப் வீரராக வைத்துவிட்டு இஷான் கிஷனை முதன்மை அணியில் தேர்வு செய்துள்ளது அனைவரது மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

மேலும் சஞ்சு சாம்சனை பேக்கப் வீரராக வைத்ததற்கும், இஷான் கிஷனை முதன்மை அணியில் இணைத்ததற்கும் ஒரே ஒரு காரணம் தான் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்கள் அவசியம் என்பதனாலே இஷான் கிஷன் இடம் பிடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஒருத்தர் உயிர் விஷயத்துல இப்படியா விளையாடுவீங்க. வைரலாக பரவும் இரங்கல் செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த – ஹீத் ஸ்ட்ரீக்கின் நண்பர்

இஷான் கிஷன் இடதுகை வீரர் என்கிற ஒரே ஒரு பாசிட்டிவான விடயம் இருப்பதாலே சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இந்த பரிதாப நிலையை சந்தித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் மிடில் ஆர்டரில் திலக் வர்மாவும் இடது கை ஆட்டக்காரர் என்பதனாலே அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement