சொதப்பும் 2 பேருக்கு தொடர்ந்து வாய்ப்பு. சாம்சனுக்கு மட்டும் நிராகரிப்பு – பி.சி.சி.ஐ க்கு எதிராக சூடுபிடிக்கும் ட்விட்டர் களம்

Samson-and-BCCI
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றோடு வெளியேறிய இந்திய அணி தற்போது அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றி அசத்தியது. இருந்தாலும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒரு போட்டியில் கூட சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் பெரிய கேள்வியை எழுப்பியது.

INDia Hardik pandya

- Advertisement -

அதோடு நாளை (நவம்பர் 25) ஆம் தேதி துவங்கவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் சஞ்சு சாம்சன் இடம் பிடித்திருந்தாலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே இந்திய அணியில் தொடர்ச்சியாக சாம்சன் இடம் பிடித்து வந்தாலும் பெஞ்சிலேயே அமர வைக்கப்பட்டு வருவது பெரிய அளவில் கேள்வி எழுப்பியை வரும் வேளையில் ஒருநாள் தொடரிலும் சாம்சன் பெஞ்சில் அமர வைக்கப்பட்டால் இந்த விடயம் இன்னும் பூதாகரமாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் தோனிக்கு பிறகு வந்த எந்த கேப்டனாலும் ஐசிசி உலகக் கோப்பையை கைப்பற்ற முடியாத வேளையில் அணியில் சரியான வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் கிரிக்கெட் உலககோப்பை அதன் பின்னர் 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை என இரண்டு ஐசிசி தொடர்களையும் கணக்கில் கொண்டு வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Sanju Samson

அதனால் தற்போது நல்ல பார்மில் இருக்கும் சாம்சனுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி அவரை நிரந்தர வீரராக அணியில் விளையாட வைக்க வேண்டும் என்றும் அவருக்கு ஆதரவாக தற்போது ட்விட்டர் வாசிகள் பிசிசிஐ-க்கு எதிராக இணையத்தில் காரசாரமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். ஏனெனில் இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம்பிடித்து விளையாடி வரும் ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சொற்ப ரன்களை எடுத்து தொடர்ச்சியாக ஆட்டம் இழந்து வந்தாலும் அவர்களை பி.சி.சி.ஐ தாங்கி பிடிக்கிறது.

- Advertisement -

அதே வேளையில் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ச்சியாக நிராகரிப்பு மட்டுமே பரிசாக கிடைப்பதாகவும் சமூக வலைதளத்தின் மூலமாக ரசிகர்கள் கடும் குற்றச்சாட்டினை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் கூறுவது போல கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் அறிமுகமாக இருந்தாலும் இதுவரை அவர் இந்திய அணிக்காக 10 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 16 டி20 போட்டிகள் என 26 போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளது சுட்டிக்காட்டியும் ரசிகர்கள் தங்களது கேள்விகளை முன் வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க : பழகிவிட்டதால் வலிக்கல, ஜிம்பாப்வே தொடரில் ராகுலால் – ஏற்பட்ட அவமானம் பற்றி ஷிகர் தவான் ஆதங்கமாக பேசியது என்ன

ஏற்கனவே இந்திய அணியில் சாம்சன் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் வேளையில் இந்த நியூசிலாந்து தொடரிலும் அவரது தொடர்ச்சியான நிராகரிப்பு தற்போது சூடு பிடிக்க துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement