பழகிவிட்டதால் வலிக்கல, ஜிம்பாப்வே தொடரில் ராகுலால் – ஏற்பட்ட அவமானம் பற்றி ஷிகர் தவான் ஆதங்கமாக பேசியது என்ன

KL Rahul Shikhar Dhawan
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த பின் நியூசிலாந்துக்கு பயணித்துள்ள இந்தியா முதலில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் மழைக்கு மத்தியில் சிறப்பாக செயல்பட்டு 1 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்றது. அதைத்தொடர்ந்து நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25ஆம் தேதி ஆக்லாந்து நகரில் துவங்குகிறது. இத்தொடரில் கேப்டன் ரோஹித் உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் மூத்த வீரர் சிகர் தவான் தலைமையிலான இளம் அணி களமிறங்குகிறது. அவரது தலைமையில் ஏற்கனவே சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் களமிறங்கி வைட் வாஷ் வெற்றியை சுவைத்த இளம் அணி தற்போது நியூசிலாந்திலும் சாதிக்க போராட உள்ளது.

IND vs NZ Kane Willamson Shikar Dhawan

- Advertisement -

முன்னதாக 2013 சாம்பியன்ஸ் டிராபியில் தோனி அறிமுகப்படுத்திய மாஸ்டர் ஓப்பனிங் ஜோடியில் ரோகித் சர்மாவுடன் 2வது அம்பாக வாய்ப்பைப் பெற்று சீறிப்பாய்ந்த ஷிகர் தவான் அதிக ரன்களை குவித்து தங்க பேட் விருதை வென்று கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அப்போது முதல் ரோகித் சர்மாவின் மானசீக பார்ட்னராக எதிரணிகளை பந்தாடிய அவர் 2017 சாம்பியன்ஸ் டிராபில் அதிக ரன்கள் குவித்த வீரர், 2018 ஆசிய கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்றவர் போன்ற பெரிய தொடர்களில் அசத்தலாக செயல்பட்டு மிஸ்டர் ஐசிசி என்று இந்திய ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.

ராகுலால் அவமானம்:

ஆனால் 2019 உலக கோப்பையில் ஆஸ்ரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயத்துடன் சதமடித்து வெற்றி பெற வைத்து வெளியேறிய அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற கேஎல் ராகுல் இளம் வீரராக சற்று சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி அவரது இடத்தை தனதாக்கி விட்டார். அதனால் காயத்திலிருந்து குணமடைந்த தவானை குப்பையாக பார்க்கும் பிசிசிஐ இதற்கு முன் ஆற்றிய பங்கிற்காக வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே போன்ற 2ஆம் தர தொடர்களில் கேப்டன் பொறுப்பை கொடுத்து அடுத்த தொடரிலேயே கழற்றி விட்டு வருகிறது.

அதை விட சமீபத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே தொடரில் முதலில் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த அவர் கடைசி நேரத்தில் ராகுல் காயத்திலிருந்து குணமடைந்து வந்தார் என்பதற்காக துணை கேப்டனாக இரவோடு இரவாக மாற்றப்பட்டார். ஆனால் சீனியரான அவரது தலைமையில் ராகுல் விளையாட மாட்டாரா? இரவோடு இரவாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன? என்று அப்போதே கேள்வி எழுப்பி ரசிகர்கள் தவானை பிசிசிஐ அவமானப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இதுபோன்ற நிலைமைகளை சந்தித்து பழகி விட்டதால் அதற்காக வருத்தப்படவில்லை என்று தெரிவிக்கும் தவான் கிடைத்த வாய்ப்புகளில் விளையாட தயார் என்று தேசப்பற்றுடன் பேசியுள்ளார். இது பற்றி இத்தொடருக்கு முன்பாக செய்தியாளர்கள் எழுப்பிய பிரத்தியேக கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியது பின்வருமாறு. “ஜிம்பாப்வே தொடரை பற்றி பேசினால் ராகுல் நம்முடைய முதன்மை அணியின் துணை கேப்டன். அவர் காயத்திலிருந்து வருவதால் ஆசிய கோப்பையில் பங்கேற்க வேண்டும் என்பது எனது மனதில் இருந்தது”

Shikhar-Dhawan

“அத்துடன் ஒருவேளை ஆசியக் கோப்பையில் ரோகித் சர்மா காயமடைந்தால் ராகுல் கேப்டனாக செயல்பட வேண்டிய நிலைமை வரும். அதனால் ஜிம்பாப்வே தொடரில் அவர் கேப்டனாக செயல்பட்டு பயிற்சி எடுத்தால் நன்றாக இருக்கும் என்று அணி நிர்வாகம் கருதியதை நானும் ஏற்றுக் கொண்டேன். அதற்காக நான் மனமுடையவில்லை. இதற்கு முன் என்ன நடந்ததோ அது நன்மைக்காக என்று நான் கருதுகிறேன். மேலும் நடைபெற்று முடிந்த தென்னாபிரிக்க ஒருநாள் தொடரில் அதே தேர்வுக்குழு தான் எனக்கு கேப்டனாக வாய்ப்பு கொடுத்தது”.

இதையும் படிங்க : IND vs NZ : சஞ்சு சாம்சனுக்கு ஒருநாள் போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காதாம் – பி.சி.சி.ஐ செய்துள்ள சூழ்ச்சி

“எனவே அதற்காக நான் மோசமாக உணரவில்லை. அத்துடன் எனது கேரியரில் எப்போதுமே இந்தியாவை வழிநடத்தும் வாய்ப்புக்காக நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். கடந்த தொடர்களில் இளம் அணியுடன் நாங்கள் வென்றோம். எனவே இத்தொடரிலும் நல்ல கிரிக்கெட் விளையாடி கோப்பையை வெல்வதே என்னுடைய நோக்கமாகும். மேலும் இந்த நியூசிலாந்து தொடரில் நிறைய இளம் வீரர்கள் தங்களுடைய திறமைகளை சோதிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அத்துடன் உலக கோப்பைக்கு தயாராக இந்த தொடர் உதவும்” என்று கூறினார்.

Advertisement