வருடங்கள் மாறினாலும், கேப்டன் மாறினாலும், இதுமட்டும் மாறவே மாறாதா? – சஞ்சு சாம்சன் ரசிகர்கள் கொந்தளிப்பு

Sanju-Samson
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி கடந்த பதினெட்டாம் தேதி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற இருந்த வேளையில் அந்த போட்டியில் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று மவுண்ட் மாங்கனி நகரில் சற்று முன்னர் துவங்கி நடைபெற்று வருகிறது.

INDvsNZ

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் இந்திய அணி தற்போது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அதன்படி இந்திய அணியானது 6.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 50 ரன்கள் குவித்திருக்கும் வேளையில் மழை காரணமாக போட்டி தற்காலிகமாக தடைபட்டு தற்போது மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி இளம் வீரரான சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இருந்து நிராகரிக்கப்பட்டது தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு கேள்விகளை எழுப்பி உள்ளது. ஏனெனில் இந்த போட்டியில் துவக்க வீரராக ரிஷப் பண்ட் இடப்பிடித்ததால் நிச்சயம் மிடில் ஆர்டரில் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சஞ்சு சாம்சன் அணியிலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக தீபக் ஹூடா இடம்பிடித்துள்ளது தற்போது கேள்விகளை எழுப்பிவுள்ளது.

sanju

ஏனெனில் கடைசியாக சஞ்சு சாம்சன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற டி20 தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் அவருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறி வர இன்றைய போட்டியிலும் ஹார்டிக் பாண்டியா அவரை கழட்டி விட்டதால் மீண்டும் இந்த விடயம் பூதாகரமாக வெடித்துள்ளது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்திய ரசிகர் ஒருவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில் : ஆண்டுகள் மாறினாலும், கேப்டன்கள் மாறினாலும், ஃபார்மேட் மாறினாலும் சஞ்சு சாம்சன் நிராகரிக்கப்படுவது மட்டும் மாறாமல் தொடர்ச்சியாக இந்திய அணியில் நடைபெற்று வருகிறது. இது எந்த அளவிற்கு சரியான ஒன்று? இதெல்லாம் நியாயமே கிடையாது என்பது போல அவர் தனது கருத்தினை பகிர்ந்து உள்ளார். அவரது இந்த டிவிட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : IND vs NZ : 2ஆவது டி20 போட்டியில் அவருக்கு ஏன் வாய்ப்பு தரல. அவருக்கு என்ன குறை – ரசிகர்கள் கேள்வி

அதேபோன்று டி20 கிரிக்கெட்டில் அற்புதமான அதிரடி ஆட்டத்தை கையில் வைத்திருக்கும் சஞ்சு சாம்சன் எளிதாக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை விளாசும் அளவிற்கு தகுதி பெற்றிருந்தாலும் அவரைத் தாண்டி சற்று தடுமாற்றத்துடன் விளையாடும் தீபக் ஹூடாவை அணியில் சேர்த்து ஏன் என்ற கேள்வியும் அதிக அளவு எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement