IND vs NZ : 2ஆவது டி20 போட்டியில் அவருக்கு ஏன் வாய்ப்பு தரல. அவருக்கு என்ன குறை – ரசிகர்கள் கேள்வி

INDvsNZ
- Advertisement -

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி கடந்த 18-ஆம் தேதி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற இருந்த வேளையில் மழை காரணமாக அந்த போட்டி கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது t20 போட்டியானது இன்று மவுன்ட் மாங்கனி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

INDvsNZ

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்பது பலரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஏனெனில் இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த போட்டியில் விளையாடும் என்பதால் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த இடத்தில் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அந்த வகையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் துவக்க வீரர்களாக ரிஷப் பண்ட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அதேபோன்று மிடில் ஆர்டரில் சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆல்ரவுண்டர்களாக ஹார்டிக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அவர்களை தவிர்த்து பந்துவீச்சாளர்களாக புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் மற்றும் யுஸ்வேந்திர சாகல் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

Shubman Gill

இந்நிலையில் இந்த போட்டியில் துவக்க வீரராக இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு டி20 கிரிக்கெட்டில் அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பி உள்ளது. ஏனெனில் சமீப காலமாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கில் டி20 கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறி வந்தனர்.

- Advertisement -

ஆனால் இன்றும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது தற்போது கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்திய அணிக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகமான சுப்மன் கில் இதுவரை 12 ஒருநாள் போட்டிகளும் 11 டெஸ்ட் போட்டிகளிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இதையும் படிங்க : IND vs NZ : ஒரே இடத்துக்கு 3 பேர் போட்டி. எப்போவுமே டீமை இப்படித்தான் செலக்ட் பண்ணுவீங்களா?

அவருக்கு இந்த தொடரில் டி20 கிரிக்கெட்டில் அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இன்றும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கும் இந்த போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.

Advertisement