IND vs NZ : ஒரே இடத்துக்கு 3 பேர் போட்டி. எப்போவுமே டீமை இப்படித்தான் செலக்ட் பண்ணுவீங்களா?

Shreyas-Samson-Hooda
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு அங்கிருந்து நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதன்படி இந்த சுற்றுப்பயணத்தின் முதலாவது டி20 போட்டியானது கடந்த 18-ஆம் தேதி வெலிங்டன் நகரில் நடைபெற இருந்த வேளையில் மழை காரணமாக அப்போட்டி ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

Pandya-and-Williamson

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று மவுண்ட் மாங்கனியில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் இளம் வீரர்களை கொண்ட அணியே இத்தொடரில் விளையாட இருக்கிறது.

ஹார்டிக் பாண்டியாவின் தலைமையில் இந்த தொடரில் இந்தியா எவ்வாறு செயல்படப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் வேளையில் மீண்டும் இந்த தொடரில் இந்திய அணியின் தேர்வு விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையில் அமைந்துள்ளது. அதுகுறித்த விவாதங்களும் சமூக வலைத்தளத்திலும் நடைபெற்று வருகின்றன.

Samson

ஏனெனில் இந்த தொடருக்கான இந்திய அணியில் மூன்றாவது வீரராக களம் இறங்கும் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக எந்த வீரர் மூன்றாவது இடத்தில் இறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் இந்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அணியில் துவக்க வீரர்களா சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்குவது உறுதி.

- Advertisement -

அதேபோன்று நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதவ் களமிறங்குவதை யாராலும் தடுக்க முடியாது. மேலும் ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட்டும், ஆறாவது இடத்தில் ஆல்ரவுண்டராக கேப்டன் ஹார்டிக் பாண்டியாவும் விளையாடுவார்கள் என்பது உறுதி. எனவே டாப் ஆர்டரில் மீதமுள்ள மூன்றாவது இடத்திற்கு மட்டும் தான் தற்போது 3 வீரர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இதையும் படிங்க : இந்தியா – நியூஸிலாந்து மோதல்களில் களத்திற்கு வெளியே நிகழ்ந்த 4 நெஞ்சை தொடும் நிகழ்வுகள் – வித்யாச பதிவு

அந்த வகையில் மூன்றாவது இடத்தில் விளையாட சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா என மூன்று பேர் போட்டியிட காத்திருக்கின்றனர். இதில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது இன்று தெரியவரும் என்றாலும் ஒரே இடத்திற்காக இத்தனை வீரர்களையா தேர்வு செய்வது? அவர்களுக்கான சரியான பேட்டிங் ஆர்டர் கிடைக்காதா? என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement