இந்தியா – நியூஸிலாந்து மோதல்களில் களத்திற்கு வெளியே நிகழ்ந்த 4 நெஞ்சை தொடும் நிகழ்வுகள் – வித்யாச பதிவு

Ajaz-5
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த இந்தியா அருகில் இருக்கும் நியூசிலாந்துக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இவ்விரு அணிகளுமே உலகக் கோப்பை செமி ஃபைனலில் தோற்றதைப் போல வரலாற்றில் எப்போதுமே சரிக்கு சமமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றன. அதில் ஐசிசி உலக கோப்பைகளில் சற்று அதிர்ச்சி கொடுக்கும் தோல்விகளை கொடுத்துள்ள நியூசிலாந்துக்கு சாதாரண தொடர்களில் காலத்திற்கு மறக்க முடியாத நிறைய தோல்விகளை இந்தியாவும் பரிசளித்துள்ளது. அப்படி சர்வதேச கிரிக்கெட்டில் தரமான இந்தியாவும் நியூசிலாந்தும் நிறைய போட்டிகளில் மறக்க முடியாத அளவுக்கு பலப்பரீட்சை நடத்தியுள்ளன.

இருப்பினும் கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் கேம் என்ற பழமொழிக்கேற்ப களத்திற்கு வெளியே இவ்விரு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் எப்போதுமே சண்டை போட்டுக் கொள்ளாமல் நட்பு பாராட்டி நண்பர்களாக செயல்படுவதை சாதாரணமாகவே பார்க்கலாம். இந்த தொடரில் கூட முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டபோது இருநாட்டு வீரர்களும் இணைந்து கால்பந்து விளையாடினார்கள். அந்த வகையில் சமீப காலங்களில் இந்தியா நியூசிலாந்து மோதிய போட்டிகளில் களத்திற்கு வெளியே நிகழ்ந்த நெஞ்சை தொடும் நிகழ்வுகளை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

4. சஹால் இன்டெர்வியூ: சமீப காலங்களில் இந்தியா வெல்லும் போட்டிகளின் இறுதியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை நட்சத்திர வீரர் யுஷ்வேந்திர சஹால் சஹால் டிவி என்ற பெயரில் பேட்டி எடுப்பது வழக்கமாகும். அது ரசிகர்களிடம் புகழ்பெற்ற நிலையில் 2020ஆம் ஆண்டு நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் ஒரு போட்டியின் முடிவில் ரோகித் சர்மா போன்ற இதர வீரர்களிடம் வழக்கம் போல சஹால் பேட்டி எடுத்தார்.

அப்போது உள்ளே புகுந்த நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் பிரபல இந்தி கெட்ட வார்த்தையை பயன்படுத்தி அதன் உண்மையான அர்த்தம் தெரியாமலேயே அவரை விளையாட்டாக திட்டினார். அதை விளையாட்டாகவே எடுத்துக் கொண்ட சஹால் பின்னர் ஹோட்டல் அறைக்குள் வீடியோ எடுத்துக் கொண்டே கப்திலை அந்த வார்த்தையை மீண்டும் உச்சரிக்குமாறு கேட்டார். ஆனால் அப்போது பேச மறுத்த கப்டில் எனக்கு நியாபகமில்லை என்ற வகையில் மழுப்பி அவரது தோள் மீது கை போட்டு நட்பு பாராட்டினார்.

- Advertisement -

3. நேரடி பாராட்டு: கடந்த வருடம் இந்திய மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வான்கடே மைதானத்தில் 2வது போட்டியில் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய நியூசிலாந்து வீரர் அஜாஷ் படேல் ஜிம் லேகர், அனில் கும்ப்ளே ஆகியோருக்கு பின் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் எடுத்து மாபெரும் உலக சாதனை படைத்தார்.

வரலாற்றில் அரிதாக நிகழக்கூடிய அந்த அசாத்தியமற்ற சாதனையை தனது திறமையால் சாத்தியமாக்கிய அவருக்கு இந்திய ஜாம்பவான் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் விராட் கோலி ஆகியோர் நேராக நியூசிலாந்து உடைமாற்றும் அறைக்கு சென்று பாராட்டு தெரிவித்தது நியூசிலாந்து ரசிகர்களின் நெஞ்சங்களை தொட்டது.

- Advertisement -

2. நெருப்பும் – ஐசும்: கடந்த 2020 நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய கேப்டன் விராட் கோலியும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனும் ஒரு போட்டியில் ஓய்வெடுத்தார்கள். ஆனால் அந்த போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கூல்ட்ரிங்ஸ் தூக்கும் வீரர்களாக மாறிய அவர்கள் எஞ்சிய நேரங்களில் பவுண்டரி எல்லை அருகே அமர்ந்து நீண்ட நேரம் மனம் விட்டு பேசினார்கள்.

அதை பார்த்த இரு நாட்டு ரசிகர்களும் என்ன பேசியிருப்பார்கள் என்று யோசித்த நிலையில் 2008 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையிலிருந்து எதிரெதிர் அணிகளில் விளையாடி வரும் தாங்கள் கிரிக்கெட்டுக்கு வெளியே தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி விவாதித்ததாக நாளடைவில் கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.

1. பாரத் மாதா கீ ஜே: அதே 2020 சுற்றுப்பயணத்தில் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற ஒரே போட்டியில் இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களும் தங்களது அணிகளுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் பாரத் ஆர்மி எனப்படும் இந்திய ரசிகர்கள் பட்டாளத்தின் பிரபல பாரத் மாதா கி ஜே கோஷத்தால் மிகவும் ஈர்க்கப்பட்ட ஒரு நியூசிலாந்து ரசிகர் அதை தமக்கும் சொல்லிக் கொடுக்குமாறு தாமாக முன்வந்து கேட்டு களத்திலேயே கற்றுக் கொண்டார். அடுத்த ஒரு சில நிமிடங்களுக்குள் அதே வசனத்தை சத்தமாக உச்சரித்த அவர் இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்தது இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை தொட்டது.

Advertisement