ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வழங்கப்பட்ட பதவியால் அதிருப்தியடைந்த சஞ்சு சாம்சனின் ரசிகர்கள் – காரணம் என்ன?

Ruturaj-and-Samson
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியானது அடுத்ததாக அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

அப்படி அயர்லாந்து செல்லும் இந்திய அணியானது அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தது போலவே நேற்று பும்ரா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது.

- Advertisement -

இந்த அணியில் சீனியர் வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டு ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையில் ஐபிஎல் தொடரில் அசத்திய இளம் வீரர்களை கொண்டே இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ருதுராஜ் கெய்க்வாட் துணைக்கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தற்போது சஞ்சு சாம்சனின் ரசிகர்கள் அனைவரும் வருத்தம் அடைந்துள்ளனர்.

ஏனெனில் ருதுராஜ் கெய்க்வாட்டை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ சீனாவில் நடைபெறவுள்ள “ஏசியன் கேம்ஸ்” தொடருக்கான கேப்டனாக அறிவித்தது. அதன் பின்னர் தற்போது மீண்டும் இந்திய அணியின் துணை கேப்டனாக இந்த தொடரில் அறிவித்துள்ளது.

- Advertisement -

இதுவரை பெரிய அளவில் கேப்டன்சி செய்யாத அவருக்கு இந்த வாய்ப்பை பி.சி.சி.ஐ வழங்கியுள்ளதால் சஞ்சு சாம்சனின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஏனெனில் சஞ்சு சாம்சன் கடந்த சில ஆண்டுகளாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஐபிஎல் தொடரில் அட்டகாசமாக வழிநடத்தி வருகிறார். அதோடு ஐபிஎல் தொடரில் முன்னணி கேப்டன்களுக்கு எதிராக தனது அற்புதமான கேப்டன்சியையும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க : அப்பேற்பட்ட நீங்க ரெண்டு பேருமா இப்டி அடிச்சுக்கிட்டீங்க? கம்பீர் – விராட் கோலி சண்டை பற்றி கபில் தேவ் வேதனை பேட்டி

இப்படி கேப்டன்சியில் அனுபவம் உள்ள சஞ்சு சாம்சனுக்கு குறைந்தபட்சம் இந்த தொடரிலாவது துணைக்கேப்டன் பதவியை வழங்கியிருக்க வேண்டும் என சஞ்சு சாம்சனின் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement