அப்பேற்பட்ட நீங்க ரெண்டு பேருமா இப்டி அடிச்சுக்கிட்டீங்க? கம்பீர் – விராட் கோலி சண்டை பற்றி கபில் தேவ் வேதனை பேட்டி

- Advertisement -

கோடைகாலத்தில் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்ற 2023 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக வென்று சாதனை படைத்தது. அதை விட அத்தொடரில் மே 1ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற போட்டியின் முடிவில் விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் சண்டை போட்டுக் கொண்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய அந்த போட்டியில் கடைசி நேரத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை நடுவர்கள் மற்றும் இரு அணியினரும் தடுத்து நிறுத்தினார்கள்.

ஆனால் அவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த லக்னோ அணியின் ஆலோசர் கௌதம் கம்பீர் சண்டையை விளக்குவதற்கு பதிலாக “என்னுடைய அணி வீரரை தீண்டுவது என்னுடைய குடும்பத்தை திட்டுவதற்கு சமம்” என்று விராட் கோலியின் நெஞ்சோடு நெஞ்சாக மோதும் அளவுக்கு சண்டையில் ஈடுபட்டது அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது. குறிப்பாக 2013 ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் கேப்டனாக விராட் கோலியுடன் சண்டையில் ஈடுபட்ட அவர் 10 வருடங்கள் கழித்தும் பகையை மறக்காமல் பயிற்சியாளராக வாக்குவாதத்தில் ஈடுபட்டது இந்திய ரசிகர்களையே ஏமாற்றமடைய வைத்தது.

- Advertisement -

கபில் தேவ் அதிருப்தி:
அதனால் இருவருக்குமே அந்த போட்டியின் சம்பளத்திலிருந்து 100% அபராதமாக விதிக்கப்பட்டாலும் அதெல்லாம் போதாது என்று விமர்சித்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இருவருக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இத்தனைக்கும் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பிறந்து ஒரே மாநில அணிக்காக உள்ளூரில் விளையாடி சர்வதேச அளவிலும் 2011 உலகக்கோப்பை போன்ற நிறைய போட்டிகளில் ஒன்றாக விளையாடி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர்கள் இத்தனை வருடங்கள் கடந்தும் சண்டை போட்டுக்கொள்வது அனைவருக்குமே ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருந்து வருகிறது.

அதில் கம்பீர் 2007, 2011 ஆகிய உலகக் கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய உலகக்கோப்பை நாயகனாகவும் பல இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாகவும் இருப்பதுடன் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். மறுபுறம் நவீன கிரிக்கெட்டில் 25000க்கும் மேற்பட்ட ரன்களையும் 75 சதங்களையும் அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் விராட் கோலி நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாகவும் பல இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாகவும் திகழ்கிறார்.

- Advertisement -

எனவே தங்களைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்று நினைத்து அந்த மரியாதைக்காகவாவது இருவரும் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் சண்டை போட்டுக் கொள்ளாமல் இருக்கலாமே என்று நிறைய கருத்துக்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இருக்கும் கௌதம் கம்பீரும் சமயத்தில் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கும் விராட் கோலியின் அன்றைய நாளில் சண்டை போட்டுக் கொண்டதை பார்த்தது தமக்கு வேதனையையும் ஏமாற்றத்தையும் கொடுத்ததாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.

குறிப்பாக நாட்டுக்காக நல்ல வீரர்களாக விளையாடும் யாராக இருந்தாலும் வருங்கால தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக திகழும் குடிமகன்களாக வளர வேண்டுமே தவிர சண்டை போட்டுக் கொள்ளக்கூடாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பின்வருமாறு. “பிசிசிஐ தங்களுடைய வீரர்களை நல்ல குடிமகன்களாகவும் வளர்க்க வேண்டும். அந்த நிலையில் ஐபிஎல் தொடரில் கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கிடையே நடந்ததை பார்த்தது எனக்கு வேதனையாக அமைந்தது”

இதையும் படிங்க:Ashes 2023 : அனல் பறந்த ஆஷஸ் தொடர் – 95 வருட தனித்துவ சாதனையை உடைத்து புதிய உலக சாதனையுடன் நிறைவு

“ஏனெனில் அவர்கள் 2 முக்கியமான நபர்கள். அதில் விராட் கோலி உலகிலேயே தற்சமயத்தில் மிகச்சிறந்த டாப் பேட்ஸ்மேனாக இருக்கிறார். கௌதம் கம்பீர் தற்போது நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இருக்கிறார். அப்படி இருந்தும் ஏன் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டார்கள்? பொதுவாக விளையாட்டு பீலே முதல் ப்ராட்மேன் வரை வீரர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டை இழப்பது சகஜமாகும்” என்று கூறினார். முன்னதாக அந்த சண்டையைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் விராட் கோலி – கௌதம் கம்பீர் ஆகியோர் மோதிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement