சஞ்சு சாம்சன் 2.0 இப்போது தான் ஆரம்பம், இனிமேல் ஆட்டம் அமர்க்களம் தான்- தமிழக வீரர் பாராட்டு

Sanju Samson Tabriz Shamsi
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விரைவில் துவங்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்கான இந்திய அணியில் கேரளாவைச் சேர்ந்த இளம் வீரர் சஞ்சு சாம்சன் ஸ்டேண்ட் பை லிஸ்டில் கூட இடம் பெறாதது நிறைய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. கடந்த 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் தன்னுடைய 2வது போட்டியை 4 வருடங்கள் கழித்து 2019இல் விளையாடினார். அதன்பின் 6 மாதத்திற்கு ஒருமுறை என்ற வகையில் குப்பையாக பயன்படுத்தப்பட்டு வந்த அவர் ஐபிஎல் 2022 தொடரில் 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து கேப்டனாக 2008க்குப்பின் ராஜஸ்தானை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று அசத்தலாக செயல்பட்டும் அடுத்ததாக நடந்த தென்னாப்ரிக்க தொடரில் தேர்வு செய்யப்படவில்லை.

Rishabh Pant Sanju Samson

- Advertisement -

அதனால் ரசிகர்கள் கொந்தளித்த நிலையில் அதைத் தொடர்ந்து நடைபெற்ற அயர்லாந்து தொடரில் வாய்ப்பு பெற்று முதல் முறையாக அரை சதமடித்து 77 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் அதன்பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே தொடர்களில் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டதால் உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல ஆரம்பம் முதலே சுமாராக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்து இவருக்கு டாட்டா காட்டிய பிசிசிஐ அதன்பின் நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா டி20 தொடரிலும் வாய்ப்பளிக்கவில்லை. அதனால் கொதித்த ரசிகர்களின் கோபத்தை தணிப்பதற்காக இந்தியா ஏ அணியின் கேப்டனாக நியமித்து பிசிசிஐ மழுப்பியது.

சஞ்சு சாம்சன் 2.0:
அப்படி எதற்கும் ஏமாற்றமடையாமல் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தும் சஞ்சு சாம்சன் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் 3 போட்டிகளிலும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு கேப்டனாக 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்தார். அதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கடைசி நேரத்தில் தேர்வு செய்யப்பட்ட அவர் முதல் போட்டியில் 83* (63) ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்.

Sanju Samson

எஞ்சிய 2 போட்டிகளிலும் 30*, 2* என இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றிய அவர் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நல்ல எதிர்காலத்தை நோக்கி தொடர்ந்து காத்திருக்கிறார். இந்நிலையில் சஞ்சு சாம்சனின் கேரியர் இப்போது தான் எழுச்சி காணத் துவங்கியுள்ளதாக தெரிவிக்கும் ரவிச்சந்திரன் அஷ்வின் இனிமேல் அவருடைய 2.0 வெர்சனை பார்க்கலாம் என்று உற்சாகத்துடன் பாராட்டிப் பேசியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த தென் ஆப்ரிக்க தொடரில் சிறப்பாக செயல்பட்டது சஞ்சு சாம்சனுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கை கொடுக்கும் என்று நம்புகிறேன். சிறப்பான வீரரான அவர் நல்ல மனிதரும் கூட. பொதுவாகவே அமைதியுடன் இருக்கும் அவர் அற்புதமான திறமை கொண்டவர் என்பதை அனைவரும் அறிவோம். குறிப்பாக முதல் போட்டியில் கிட்டத்தட்ட அவர் இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அந்த வகையில் சஞ்சு சாம்சன் சேப்டர் 2.0 இப்போதிலிருந்து ஆரம்பித்து நல்லபடியாக அமையப் போகிறது” என்று கூறினார்.

Ashwin

பொதுவாகவே ஐபிஎல் தொடரில் டாப் ஆர்டரில் விளையாடும் சஞ்சு சாம்சன் இந்தியாவுக்காக மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பை மட்டுமே பெறுகிறார். இருப்பினும் அதையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாக தெரிவிக்கும் சஞ்சு சாம்சன் வருங்காலங்களில் இந்திய அணியின் பினிஷெராக செயல்படுவதற்கு தயாராகுங்கள் என்ற வழிகாட்டுதல் அணி நிர்வாகத்திடம் இருந்து வந்துள்ளதாக கூறினார். இது பற்றி 2வது ஒருநாள் போட்டிக்கு பின் அவர் பேசியது பின்வருமாறு :

- Advertisement -

“கடந்த சில வருடங்களாக வெவ்வேறு வேலைகளில் சிறப்பாக செயல்படுவதற்கு தேவையான பயிற்சிகளை நான் செய்து வருகிறேன். அதிலும் வெவ்வேறு வகையான கிரிக்கெட்டில் அழுத்தமான சமயங்களில் சிறப்பாக செயல்படும் பயிற்சிகளை மேற்கொள்கிறேன்”. “மேலும் கடந்த வருடமே அணி நிர்வாகம் எனக்கு சில வழிகாட்டுதல்களை கொடுத்தது. பொதுவாக எனக்கு உடலளவில் டாப் ஆர்டரில் விளையாட பிடிக்கும் என்றாலும் தேவைக்கு ஏற்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு மிடில் ஆட்டத்தில் விளையாடுவதற்கு தேவையான மன உறுதியை தற்போது கற்று வருகிறேன்.

இதையும் படிங்க : எனக்குள் இருக்கும் அந்த ஃபயர் தான் எனது வெறித்தனமான பந்துவீச்சுக்கு காரணம் – முகமது சிராஜ் பேட்டி

அத்துடன் என்னிடம் அணி நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறதோ அதை நான் சிறப்பாக செய்து கொடுப்பதில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன்” என்று கூறினார்.

Advertisement