எனக்குள் இருக்கும் அந்த ஃபயர் தான் எனது வெறித்தனமான பந்துவீச்சுக்கு காரணம் – முகமது சிராஜ் பேட்டி

Siraj
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பெற்றிருந்த வேளையில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் என்ற இந்திய அணி முதலாவதாக பந்து வீசியது. அதன்படி முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்களை மட்டுமே குவித்தது.

Shreyas IND vs SA Sanju Samson Shreyas Iyer

- Advertisement -

பின்னர் 100 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 19.1 ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 105 ரன்கள் குறித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இந்த தொடரின் தொடர் நாயகன் விருதானது இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜிக்கு வழங்கப்பட்டது.

இந்த தொடர் முழுவதுமே அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் காரணமாக அவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் 8 ஓவர்கள் வீசிய சிராஜ் விக்கெட் எதுவும் எடுக்காமல் 49 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். அதனை தொடர்ந்து ராஞ்சி நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 10 ஓவர்கள் வீசிய அவர் ஒரு மெய்டன் உட்பட 38 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். அதனை தொடர்ந்து நேற்று டெல்லி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஐந்து ஓவர்கள் வீசிய முகமது சிராஜ் 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Siraj

இந்த தொடர் முழுவதுமே பவர்பிளே ஓவர்களில் மிகச்சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் காரணமாக அவருக்கு இந்த தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய முகமது சிராஜ் கூறுகையில் : தென் ஆப்பிரிக்கா போன்ற தரமான அணிக்கு எதிராக இப்படி ஒரு சிறப்பான பந்துவீச்சை வழங்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும் கொடுத்துள்ளது.

- Advertisement -

இந்திய அணியில் நான் என்னுடைய பொறுப்பை உணர்ந்து அதை கையில் எடுத்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் நான் இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக பந்து வீசியது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சரியான லென்த்தில் சரியான அளவில் பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்து போட்டிக்கு நல்ல துவக்கம் கொடுக்க வேண்டும் என்று நினைத்து பந்து வீசினேன்.

இதையும் படிங்க : சூப்பர் கார் இருந்தும் ஒர்க் ஷாப்’லயே விட்டுட்டு வந்துட்டீங்க, இந்திய பவுலர் பற்றி ஆஸி ஜாம்பவான் கருத்து

அதோடு ஒரு வேகப்பந்து வீச்சாளராக பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டை எடுத்து அணிக்கு நல்ல துவக்கத்தை அளிக்க வேண்டும் என்று என்னுள் இருந்த ஃபயரும், பேஷனும் தான் என்னுடைய இந்த சிறப்பான பந்துவீச்சுக்கு காரணமாக இருந்தது. இந்த தொடரில் எனது பந்துவீச்சை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது என்று தொடர் நாயகன் விருது பெற்ற சிராஜ் மகிழ்ச்சி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement