சஞ்சு சாம்சன் மற்றும் அஷ்வின் ஆகியோர் உலககோப்பைக்கு தேர்வாக இன்னும் வாய்ப்பு இருக்கு – எப்படி தெரியுமா?

Ashwin-and-Samson
- Advertisement -

இந்தியாவில் அடுத்த அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி துவங்கும் ஐ.சி.சி யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் மாதம் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி கெடு விதித்துள்ளது. அதன் காரணமாக இந்திய அணியும் நேற்று தங்களது அதிகாரபூர்வ 15 பேர் கொண்ட இந்திய உலகக்கோப்பை அணியை அறிவித்துவிட்டது.

இந்த பட்டியலில் முன்னணி வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அஸ்வின் ஆகியோர் இடம் பெறாதது அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்தது. மேலும் சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக செயல்பட்ட வேளையில் சூரியகுமார் யாதவை அணியில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே அவரை கழட்டி விட்டதால் ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர்.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது திறனை சூரியகுமார் யாதவ் வெளிப்படுத்தி இருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரை காட்டிலும் சஞ்சு சாம்சன் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அவர் அணியில் இடம் பெற்று இருக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் உலக கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்திய அணி உலக கோப்பை தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

அந்த தொடரில் ஒருவேளை சஞ்சு சாம்சன் இடம்பெற்று சிறப்பாக விளையாடும் பட்சத்தில் செப்டம்பர் 27-ஆம் தேதி வரை இறுதி அணியில் மாற்றம் செய்ய இறுதி கெடு இருப்பதினால் அவரை அணியில் சேர்க்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோன்று அஸ்வின் அணியில் இடம்பெற வேண்டுமெனில் சுழற் பந்துவீச்சாளர்களில் யாரேனும் காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு மாற்றுவீரராக நிச்சயம் அஸ்வின் தான் முதன்மை தேர்வாக இருப்பார்.

இதையும் படிங்க : அவர மாதிரி பிளேயர் இனி உலகத்துல பிறக்க போறதில்ல, ட்ராவிட் எங்கிட்ட தடுமாறுவாரு – இந்திய ஜாம்பவானை பாராட்டிய முரளிதரன்

உலகக்கோப்பை அணியில் இறுதி மாற்றம் செய்ய இன்னும் 27-ஆம் தேதி வரை அவகாசம் இருப்பதினால் அஸ்வின் மற்றும் சாம்சன் ஆகியோர் இடம்பிடிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் ஒருவேளை இதுபோன்ற சில மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருந்தால் அது செப்டம்பர் 27-ஆம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement