IND vs WI : சஞ்சு சாம்சன் ரிஷப் பண்ட் கிடையாது, சான்ஸ் வேஸ்ட் பண்ணிட்டே இருக்காரு – முன்னாள் பாக் வீரர் அதிருப்தி

Rishabh Pant Sanju Samson
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 308/7 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 97 ரன்களும், சுப்மன் கில் 64 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 54 ரன்களும் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் மற்றும் மோட்டி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

IND vs WI Mohammed Siraj India

- Advertisement -

அதை தொடர்ந்து 350 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு கெய்ல் மேயர்ஸ் 75 ரன்களும், சமர் ப்ரூக்ஸ் 46 ரன்களும், ப்ரெண்டன் கிங் 54 ரன்களும் எடுத்தாலும் இந்தியாவின் நல்ல பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் அகில் ஹொசைன் 32* ரன்களும் ரோமரியா செபார்ட் 39* ரன்களும் எடுத்து வெற்றிக்காக போராடிய போதிலும் 50 ஓவர்களில் 305/6 ரன்கள் மட்டுமே எடுத்து அந்த அணி போராடி தோற்றது. இந்தியா சார்பில் சிராஜ், சஹால், தாகூர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

ஏமாற்றிய சஞ்சு:
அந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் மீண்டும் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். குறிப்பாக டாப் 3 இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுத்ததால் 350 ரன்களை தொடுவதற்கு பிரகாசமான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மிடில் ஆர்டரில் களமிறங்கிய அவர் 1 சிக்சர் உட்பட 12 (18) ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்ததால் அந்த வாய்ப்பை நழுவ விட்ட இந்தியா பந்துவீச்சாளர்களில் சாமர்த்தியத்தால் திரில் வெற்றியை சுவைத்தது. அதன் காரணமாக நிறைய ரசிகர்கள் அவர்மீது அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார்.

sanju samson

ஏனெனில் கடந்த 2015இல் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவருக்கு கடந்த 7 வருடங்களில் 5 வருடத்திற்கு ஒரு முறையும் 2 வருடத்திற்கு ஒரு முறையும் 6 மாதத்திற்கு ஒரு முறையும் என வெறும் 14 போட்டிகளில் மட்டுமே தொடர்ச்சியற்ற வாய்ப்பு கிடைத்தது. அதில் 13 போட்டிகளில் சொதப்பிய அவருக்கு அயர்லாந்து டி20 தொடரில் ஒரு வழியாக முதல் அரை சதத்தை அடித்து 77 ரன்கள் குவித்த போதிலும் பின்னர் நடந்த இங்கிலாந்து தொடரில் மீண்டும் தேர்வு குழு வாய்ப்பளிக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 2021இல் இலங்கை மண்ணில் அறிமுகமான அவர் 46 ரன்கள் குவித்த நிலையில் சுமார் ஒரு வருடங்கள் கழித்து இப்போது கிடைத்த 2-வது வாய்ப்பை பொன்னாக மாற்ற தவறினார்.

- Advertisement -

பண்ட் கிடையாது:
ஏற்கனவே வாய்ப்பு கொடுக்க மறுக்கும் தேர்வுக்குழுவுக்கு மத்தியில் எப்போதாவது கிடைக்கும் இதுபோன்ற வாய்ப்பை கச்சிதமாக பிடித்துக் கொள்ள வேண்டாமா என்பதே பல முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது. இந்நிலையில் பேட்டிங் வரிசையில் முன்கூட்டியே களமிறங்கினால் அதை சிறப்பாக பயன்படுத்தும் அளவுக்கு சஞ்சு சாம்சன் ஒன்றும் ரிஷப் பண்ட் கிடையாது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனேஷ் கனேரியா கூறியுள்ளார். அவரைப் போலவே வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் அதிகமாக தடுமாறிய ரிஷப் பண்ட் சமீபத்திய இங்கிலாந்து ஒருநாள் தொடரில் மேல் வரிசையான 4-வது இடத்தில் களமிறங்கி சதமடித்து வெற்றிபெற வைத்தார்.

Danish-Kaneria

அதுபோன்ற திறமை சஞ்சு சாம்சனிடம் இல்லை என்று தெரிவிக்கும் அவர் இதுபோன்ற குறைவான வாய்ப்புகளையும் வீணடித்து வருகிறார் என்று கூறியுள்ளார். இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “மீண்டும் ஒரு வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன் ஸ்பெஷலாக எதுவும் செய்யவில்லை. ரோமரியா செபார்ட் அவுட் செய்வதற்கு முன்பாகவும் அவர் தடுமாற்ற பேட்டிங்கை வெளிப்படுத்தினார். மேலும் தீபக் ஹூடாவை பற்றி நான் பேச விரும்புகிறேன்.

- Advertisement -

அவர் ஏன் கீழ் பேட்டிங் வரிசையில் வருகிறார்? ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் 2 மற்றும் 3 இடங்களில் வருவது சரி ஆனால் தீபக் ஹூடா சஞ்சு சாம்சனுக்கு முன்னதாக வந்திருக்க வேண்டும். ரிஷப் பண்ட் போல் சாம்சன் மேலே களமிறக்கப்பட்டார். ஆனால் சஞ்சு சாம்சன் ரிஷப் பண்ட் கிடையாது. அவரின் பேட்டிங் முற்றிலும் மாறுபட்டது” என்று கூறினார்.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 ஆவது நபராக ஜாம்பவான் பட்டியலில் இணைந்த ஏஞ்சலோ மேத்யூஸ் – ரசிகர்கள் வாழ்த்து

இது போன்ற விமர்சனங்களுக்கு இன்று நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு சஞ்சு சாம்சன் முற்றுப்புள்ளி வைப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement